இடுகைகள்

ஸ்டீவ் ஜாப்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

படம்
  ஆஃப்டர் ஸ்டீவ் டிரிப் மிக்கில் ஹார்ப்பர் கோலின்ஸ் 599 ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார்.  புதின்  பிலிப் ஷார்ட்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல்.  தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின் ஜேமி பார்ட்லெட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை. இவர் ஹார்வர்டில் படித்தவர்.

இரண்டாவதாக ஓடி ரேசில் வென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சூப்பர் பிஸினஸ்மேன் என்று யாரையாவது கூற வேண்டுமெனில் யாரைக் கூறலாம் ? பில்கேட்ஸ் அல்ல . பில் ஹியூலெட் , டேவிட் பெக்கார்டு ஆண்டி குரோவ் , கூகுளின் இரட்டையர்களை கூறலாம் . ஆனால் பலருக்கும் மனதில் வரும் ஒரே பதில் ஆப்பிளை மக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் . இப்போது டிம் குக் , நிறுவனத்தின் லகானைப் பிடித்து செலுத்தினாலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது , அதனை எளிமைப்படுத்துவது ஆகியவற்றில் மாஸ்டர் ஸ்டீவ்தான் . வாடிக்கையாளர் பயன்படுத்தும் ஆப்பிள் பொருட்கள் , எளிதாக இருக்கவேண்டும் . அதன் பயனர் கையேட்டை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என மெனக்கெட்டார் . ஆப்பிளின் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழாவைப் போல நடத்தப்படும் . எப்படி பொருளை மார்க்கெட்டிங் செய்வது என்பதை ஸ்டீவ் தனது அனுபவங்கள் வழியாக கற்றிருந்தார் . அதனால்தான் ஆப்பிள் என்றால் ஸ்டீவ் , ஸ்டீவ் என்றால் ஆப்பிள் என்று இன்றுமே கூறப்படுகிறது . 1955 ஆம் ஆண்டு தனது அம்மாவின்

மேக் கணினிக்கு வயது 30!

1987-90 களில் டெக் வட்டாரங்களில் ஒரே பேச்சு. மேக் குறித்துத்தான். அப்போது மேக்கின்டோஷ் என்று கூறுவார்கள். ஒன்பது அங்குல சைசில் அன்று இந்த கணினி டைனோசர் போலத்தான் இருந்தது. மேக்கின்டோஷ் எஸ்இ எனும் இந்த கணினி 20 மெகாபைட் ஹார்ட் டிஸ்க்கை கொண்டிருந்த து. விலை 3,900 டாலர்கள். அன்று ஆச்சரியமாக இருந்த மாக்கின்டோஷ் கணினி, இன்று அனைத்து முக்கிய கலைஞர்களும் தங்களுக்கென வாங்கும் வகையில் ஜனரஞ்சமாகிவிட்டது. ஆனால் விண்டோஸ் அளவுக்கு கிடையாது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் கூட கணினியை வீட்டில் வாங்கியபின்னரே பள்ளிக்குச் செல்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு, கணினியில் ஃபேன் ஓடாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான். மேலும் இதனை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்வதும் எளிமையாக இருக்கவேண்டும் என அவர் நினைத்தார். இதனை ஆப்பிள் 2 சாதித்தது.