இடுகைகள்

அளவீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதனைகள்!

படம்
  சோறு தின்றுவிட்டு பற்களில் உள்ள துணுக்குகளை நீக்குவதற்கு பற்குச்சி உதவுகிறது. ஆனால் அதே குச்சியை வைத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்களை ஒருவர் உருவாக்கினால் அவரது புத்திசாலித்தனத்தை என்ன சொல்லுவீர்கள்? இ்ந்தியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெரிய மதிப்பில்லை. மதம், சாதி, இனம் பார்த்து பாராட்டுவது இந்நாட்டின் தனிக்குணம். அயல்நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டு புதுமைத்திறன் என்கிறார்கள். அதை இனவெறி கடந்தும் பாராட்டுகிறார்கள். இப்படி மேதாவியாக யோசிப்பவரின் புத்திசாலித்திறனை அளக்க ஐக்யூ அளவீடுகள் கூட உண்டு. 1905ஆம் ஆண்டு வரை ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட அளவீடு என்று ஒன்று உருவாக்கப்படவில்லை. பிரெஞ்சு உளவியலாளரான ஆல்பிரட் பைனட், தியோடர் சைமன் ஆகியோர் இணைந்து பைனட் சைமன் ஸ்கேல் என்ற அளவீட்டை உருவாக்குகிறார்கள். இதில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளவிடும் அம்சங்கள் உள்ளன. நினைவுத்திறன், கவனம், பிரச்னையை தீர்க்கும் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டன.  இதில் தோராயமான ஐகியூ அளவீடு 100. அதிமேதாவி என்றால் 145. மற்றபடி பிறர், எழுபது முதல் 130க்குள் வருவார்கள். உலகில் மேதாவி என்பவர்களின் அ

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models