சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !
அருஞ்சொல்....
கிளைமேட் சேஞ்ச் (Climate Change)
குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும் காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.
கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback)
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.
கிளைமேட் லேக் (Climate Lag)
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.
கிளைமேட் மாடல் (Climate Model)
கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது.
கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity)
வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.
https://polarpedia.eu/en/climate-lag/
https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models
கருத்துகள்
கருத்துரையிடுக