நோபல் பரிசு பெற்ற நியூரோட்ரான்ஸ்மீட்டர் ஆய்வு - ஓட்டோ லோவி
ஓட்டோ லோவி (1873 -1961)
ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் பிறந்தவர், லோவெய். பெற்றோர் ஜேக்கப் லோவி, அன்னாவில்ஸ்டாட்டர். பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். காசநோய் பாதிப்பால் மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாவதைப் பார்த்தார். இதனால், குணப்படுத்தமுடியாத நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய முயன்றார். 1902ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்தவர்,ஹென்றி டேலுடன் இணைந்து ஆராய்ச்சியை செய்யத் தொடங்கினார்.
1936ஆம் ஆண்டு, டேல் மற்றும் லோவி செய்த நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஆய்வுக்கு மருத்துவப்பிரிவில் நோபல் பரிசு கிடைத்தது. 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.எனவே, 1940ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் (Pharmacology) பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். 1954ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் வெளிநாட்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
https://www.nobelprize.org/prizes/medicine/1936/loewi/biographical/
கருத்துகள்
கருத்துரையிடுக