இடுகைகள்

மாலுமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமான நுழைவாயில்!

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நுழைவாயில்!  அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆய்வாளரான

தொன்மை வரைபடங்கள் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றன?

படம்
  தொன்மை வரைபடங்களின் வரலாறு! இன்று கூகுள் நிறுவனத்தின் மேப் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் குறைவு. இணைய வசதி இருந்தால், இச்சேவையை உலகின் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம. காணவேண்டிய இடங்களை அடையாளம் கண்டறிய முடியும். இன்று எப்படி சாலையோரம் உள்ள வரைபட பலகை அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடங்களைப் பார்த்து இடங்களைக் கண்டறிகிறோம்.தொன்மைக்காலத்தில் இடங்களைக் கண்டறிய வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.   தொன்மைக்காலத்தில், பிரான்சின் லஸ்காக்ஸிலுள்ள குகையில் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் 16,500 ஆண்டுகள் என அகழ்வராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதில், எருதுகளும், பறவைகளும் குறியீடாக இடம்பெற்றுள்ளன. இவை வரைபடத்தில் நட்சத்திரங்களாக அறியப்படுகின்றன.   இதைப்போலவே தற்போது  பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படும் தொன்மையான  வரைபடம் ஒன்றுள்ளது.  கி.மு.6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என மதிப்பிடப்படும்  இந்த  வரைபடத்திற்கு, பாபிலோனியன் மேப் ஆஃப் தி வேர்ல்ட் (Babylonian map of the world)  என்று பெயர். 13 செ.மீ. நீளத்தில் கொண்ட களிமண்ணில் உருவாக்கப்பட்ட வரைபடம் இது. இதைக் கண்டறியப்பட்ட ப