இடுகைகள்

தாய்மொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாத்தாவின் கடனை அடைக்க பொக்கிஷத்தை தேடிச்செல்லும் பேத்தி! - ஃபைண்டிங் ஓகானா

படம்
                ஃபைண்டிங் ஓகானா !   Director: Jude Weng Produced by: Ian Bryce Writer(s): Christina Strain அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஹவாய்க்கு இடம்பெயருகிறது ஓர் குடும்பம் . தாத்தாவின் வீட்டுக்கு வரும் சிறுமி , பொக்கிஷம் பற்றிய டைரியை தாத்தாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கிறாள் . அப்புறமென்ன , பொக்கிஷ வேட்டைதான் . படத்தின் கதையைப் பார்த்தால் ஏதோ இந்தியா ஜோன்ஸ் ஜூனியர் என்று பெயர் வைக்காமல் படம் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும் . ஆனால் படம் நெடுக குடும்ப பாசம் , இயற்கை மீதான நேசம் , முன்னோர்களுக்கு மரியாதை , ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது என ஏராளமான சமாச்சாரங்களை வைத்து கண்கலங்க நெகிழ்ச்சியாக படம் சொல்கிறார்கள் .    நியூயார்க்கிலிருந்து வரும் குடும்பத்தின் டீன் ஏஜ் பையன் , சிறுமி , அம்மா ஆகியோரோடு ஹவாய் தீவில் வாழும் தாத்தா , அவரின் நெருக்கமான இளம் பெண்ணும் அவளது தம்பியும்தான் கதை நாயகர்கள் . ராபின்சன் பரௌன் என்ற தீவுக்கு வந்த வெள்ளைக்காரர் , புனித குகையில் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் தகவலை நோட்டில் பதிவு செய்கிறார் . ஆனால் உயிர்போகும் அபாயத்திலிரு

தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்!

படம்
   இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை,  ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து  அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.  இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும்  அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திகளை நீங்கள் வீடியோவாக பார்க்கவேண்டும் என்பதில்லை. ஒலிக்கோப்பாக கேட்

தாய்மொழியை மறக்கும் திபெத் மாணவர்கள்!

படம்
சீன அரசு திபெத் பகுதியை தன்னுடைய பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. திபெத் மாணவர்களுக்கு இருமொழி முறையில் கல்வி கற்பித்து வருகிறது. இதில் பெரும்பாலும் தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு திபெத்திய தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர சீன அரசு முயன்று வருவதை மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜிங் பிங் தலைமையில் சீனாவில் நடந்து வரும் ஆட்சி, தேசியவாதத்தை  தீவிரமாக வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, திபெத் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் சட்டம் திரும்ப ப்பெறப்பட்டது. இருமொழி கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அங்கு மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்கு பள்ளிகளில் சீனமொழியை பயிற்றுவிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டை ஒரே நாடாக ஒருங்கிணைக்க முடியும் என அரசு நினைக்கிறது. 2010-12 காலகட்டத்தில் திபெத்தின் கிங்கெய் பகுதியில் சீனமொழி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.  ஆனாலும் அரசை எதிர்த்து நிற்கமுடியவில்லை. பின்னர், பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் சீனமொழியை கொண்ட

தாய்மொழியில் அறிவியலை ஊக்குவிக்கும் அமைப்புகள்!

படம்
pixabay தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்! இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை, ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.  இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும் அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திக

மொழியை வளர்க்க சில நூல்கள்! - புத்தகம் புதுசு!

படம்
மொழி இல்லையென்றால் நாம் எப்படி செயல்படுவோம்? தமிழோ, இந்தியோ உள்நாட்டுப் போட்டியை விடுங்கள். அடிப்படையில் தகவல் தொடர்புக்கு மொழி என்று ஒன்று தேவை இல்லையா? இதைத் தீர்த்துவைக்கும் மொழி பற்றிய புத்தகங்கள் உங்களுக்காக இதோ. Because Internet  by Gretchen McCulloch இன்று உங்கள் நண்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகிறீர்கள்.அதில் ஓகே என்பதுற்கு k என்று மட்டும்தான் பதில் வரும். காரணம், இணைய உலகம் அப்படி மாறி வருகிறது. அதுபோன்ற மொழிமாற்றம் முக்கியமானதும் கூட. தகவல்தொடர்பின் வடிவம் மேம்பட்டு வருவதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதன்மூலம் மில்லினிய ஆட்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை நம் புரிந்துகொள்ள முடியும்.  Language Unlimited  by David Adger ஆங்கிலம், பிரெஞ்சு என பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள் என்றாலும் பொதுவாக அம்மொழியைப் புரிந்துகொள்வதற்கென இலக்கணம் உள்ளது. இதில் சில அம்சங்கள் ஒன்றுபோலவே இருக்கும். அதுபோல விஷயங்களை ஆசிரியர் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார்.  Extraterrestrial Languages  by Daniel Oberhaus நாம் மனிதர்களுடன் பேசினால் மட்டும் போதும