இடுகைகள்

புதிய மின்னூல் வெளியீடு மற்றும் தரவிறக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெ.1 சமூகத் தொழிலதிபர் மின்னூல் வெளியீடு! - அமேஸான் வலைத்தளம்

படம்
அன்பு நிறை நண்பர்களுக்கு,  வணக்கம். நான் முதலில் முத்தாரம் பொது அறிவு வார இதழில் ஸ்டார்ட்அப் மந்திரம் என்ற தொடரை எழுத தொடங்கினேன். அப்போது பிரதமர் மோடியின் அரசு, ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை தொடங்கியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் நிறைய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் எப்போதும் அரசு மிக நிதானமாக அனுமதிகளை பரிசீலித்து செம்மையாக பணியாற்றியதில் பல்வேறு நிறுவனங்கள் காணாமல் போயின. நான் அந்த தொடரை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை ஆதாரமாக கொண்டே எழுதினேன். அப்போது இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை தேடி தகவல் சேகரிக்க யோசிக்கவில்லை. இதழை வேகமாக முடிக்கவேண்டிய டெட்லைன் நெருக்கடி வேறு.  என்னளவில் நான் எழுதிய தொழில்சார்ந்த முதல் தொடர் அது. ஏறத்தாழ எழுதி முடித்தபிறகு பார்த்தால் படுமோசமான எழுத்தாகவே தென்பட்டது. அதற்குப் பிறகுதான், குங்குமத்திற்காக வணிகம் சார்ந்து எழுத ஆசிரியர் கே.என்.எஸ் கேட்டார். ஆனால் பிஸ்னஸ் இந்தியா நிருபர் எழுதிய தமிழக தொழிலதிபர்கள் பற்றிய நூலைப் படித்ததும் புரிந்துவிட்டது. என்னால் தொடருக்கான தகவல்களை திரட்ட முடியாது. எனக்கு தொழில்சார்ந்து எழுதும் திறமை கிடையாது என ஆசிரியரிடம் சொல்லிவி

தீப்பந்தம் - மொழிபெயர்ப்பு நேர்காணல் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ!

படம்
நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை.  இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை  செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் புற்றுநோய்

உடல் மனம் உள்ளே - உளவியல் குறைபாடுகளும் சிகிச்சைகளும் - தரவிறக்க முகவரி

படம்
உடல் மனம் உள்ளே என்ற நூல், பல்வேறு உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சைகள். வழங்கப்படும் மருந்துகளைப் பற்றி பேசுகிறது. பொதுவாக நாம் உடல் அளவுக்கு உள்ளத்தைப் பற்றி பேசுவதில்லை. மனிதர்கள் குழுவாக வசித்தாலும் தனிப்பட்ட மனிதர்களாகவே அவர்களுக்குள் இருக்கிறார்கள். பல்வேறு அடக்கப்பட்ட உணர்ச்சிகள், உடல் குறைபாடுகள், சிறுவயது அனுபவங்கள் ஆகியவை அவர்களின் பிற்கால வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இதன்காரணமாகவே பல்வேறு உளவியல் குறைபாடுகளுள்ள மனிதர்கள் சமூகத்தில் உருவாகிறார்கள். இவர்களுக்கு தேவை சிகிச்சை மட்டுமே. இவர்களைக் கொன்றால் சமூகத்திலுள்ள தீமைகள் அழிந்துவிடாது என்பதை நாம் இன்னும் தெளிவாக உணரவில்லை. அதற்கான விஷயங்களை இந்த நூல் தெளிவுபடுத்தும் என்ற நினைக்கிறேன்.  இந்த நூல் அனைவருக்கும் சென்று சேரவேண்டிய நோக்கத்தில் கிரியேட்டிவ் காமன் உரிமையில் வெளியிடப்படுகிறது. இந்த நூலை தங்களது வலைத்தளங்களில் பகிர்பவர்கள் , அதுபற்றிய தகவல்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு ( arapress@protonmail.com) அனுப்பி வைத்தால் நன்றாக  இருக்கும்.  ஆனந்தமாக நூலை தரவிறக்கு வாசியுங்கள். நன்றி. நூலை எழுத ஊக்கம் தந்த தோழர் பாலபாரத

மின்னூல் வெளியீடு :மனதேசப் பாடல் – கட்டுரைகள்

படம்
மனதேசப் பாடல் – கட்டுரைகள் ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License ஆக்கம்:   ஜேம்ஸ் பாம்பிரே ,  லாய்டர் லூன் தொகுப்பு:   அரசுகார்த்திக் ,  கிறிஸ் டோல்ட் வகை:   குறுங்கட்டுரைகள் ஆக்கத்தலைமை:   ராஜா சம்மார், கார்த்திக் வால்மீகி, ரஞ்சன் மஹர் பதிப்பாளர் :   தி ஆரா  பிரஸ் , இந்தியா. தட்டச்சுப்பணி:   அச்சுதை, ரோஸலின் ஸ்ரைக் புகைப்படம் உதவி:   பின்ட்ரெஸ்ட் இணையதளம். அட்டைவடிவமைப்பு:   தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா. ஒருங்கிணைப்பு:   ஹெரிடேஜ் தமிழன்,கித்தான் முத்து,ஸ்பீடு செந்தில். வலைப்பூ அனுசரணை:   Komalimedai.blogspot.in மின்னஞ்சல்:   sjarasukarthick@rediffmail.com மின்னூலாக்கம் – சிவமுருகன் பெருமாள் –  sivamurugan.perumal@gmail.com கிரியேட்டிவ் காமன்ஸ் 4.0 2014 உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம். இவ்வெழுத்துக்களை பயன்படுத்தும் போது வலைப்பூ முகவரி, மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். உர

தேதியிடா குறிப்புகள்

படம்
தேதியிடா குறிப்புகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடா குறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது! பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்