தேதியிடா குறிப்புகள்

தேதியிடா குறிப்புகள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடாundated_diaryகுறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது!
பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்போல இவையும் அழிந்துபோயிருக்கும் சூழலில் காப்பாற்றப்பட்ட குறிப்புகளாகும். இதை எழுதியவர் இன்று இல்லாதபோதும் காலத்திற்கேற்ப தொகுத்தளிக்க முயற்சித்திருக்கிறேன். வெளியீட்டு அனுசரனையாளரான komalimedai.blogspot.in வலைப்பூவிற்கும், அழகாக அட்டைவடிவமைத்த தி ஆரா பிரஸ் குழுவினருக்கும் என்றும் எனதன்பு உரித்தானது.
பிரியங்களுடன்
வின்சென்ட் காபோ
இந்த மின்னூலினை தரவிறக்கம் செய்ய இந்த இணையதளம் செல்லுங்கள். நன்றி.
http://freetamilebooks.com/ebooks/undateddiary/

கருத்துகள்