பகலில் ஒரு குதிரை,



                                                                           6

                                 பகலில் ஒரு குதிரை








இன்று ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். நல்ல ரேஸ் குர்ரம் போல உடம்பு. குதிரை போலவே தலை, அட குதிரை போலவே பின்கழுத்து முடி. ஒவ்வொரு தலை திருப்பலுக்கும் குதிரை என் கண்முன்னே அசைந்தது போலவே இருந்தது. தலைக்கு ஜெல் போட்டிருப்பார் போல. கடும் நெடி. சமயத்தில் நின்றுபோன 501 சோப்பின் வாடையின் சேர்மானங்கள் கூட அவரது நீண்ட முடிகொண்ட கேசத்தில் இருந்தது. வாளிப்பான முடியாக பின்னாளில் நீளும் என்ற நம்பிக்கையுடன் முடியை தடவிக்கொண்டே இருந்தார். பாடல்கேட்டுக்கொண்டு தலையை ஆட்ட ஆட்ட என் கண்முன்னே குதிரை தலை திருப்பல்கள் பலிதமாகிக்கொண்டு இருந்தன். எனக்கென்னமோ எனது பின்னாலிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது போல என் பிடரியில் ஒரு உறுத்தல் நான் இறங்கும் நிறுத்தம் வரையில் இருந்தது. நிச்சயம் இது என்னுடைய கற்பனை இல்லை என் மூலாதாரத்திலிருந்து எங்கேனும் சக்தி பாய்ந்து யுபிஎஸ் வேலை செய்ய தொடங்கியிருக்குமா? மன்னிக்கவும் யுஎஸ்பி இந்த வித்தைகளே நான் நிகோலஸ் கேஜ் நடித்த நெக்ஸ்ட் என்ற படத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். எனக்கு இதுநாள் வந்த கனவுகளிலெல்லாம் பாம்பு, மண்புழு , தேள் எல்லாம் ராமநாராயணன் படங்களில் வரும் மரம் பிடுங்கிக்கொண்டு ஆடுவது பல்வேறு வித்தைகள் காட்ட அலறிக்கொண்டு எழுந்து வீட்டில்லோர் அனைவருக்கும் நடுநிசி அலாரமாகியிருக்கிறேன். பிரச்சனைகள் கடுமையாக இருந்து அதனை சிந்தித்துக்கொண்டு படுத்திருக்கும்போது, அதனை தீர்க்கும் விதமானவை கனவில் வரும் என்கிறார்கள். இது ஆச்சரியம்தான்  இல்லையா? உங்களுக்கு யாருக்கேனும் இப்படி வந்திருக்கிறதா தோழர்களே! நான் இதைக்கொண்டு ஆராய்ச்சிக்கட்டுரை எல்லாம் எழுதமாட்டேன். நம்புங்கள். பேருந்தில் ஒரு குதிரை என்பதுதான் இதன் தலைப்பாக இருந்திருக்கவேண்டுமோ?

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்