திட்டமிடல்கள் உடைகின்ற காலம் இது
திட்டமிடல்கள் உடைகின்ற காலம் இது
பெரிய திட்டமிடல்கள் ஏதும் எனக்கில்லை. அன்பரசு போல கனவுகள் இல்லை. ஜோஃபாக்ஸ் போல லட்சியத் திட்டமிடல்கள் கிடையாது. வேலைக்குப்போகவேண்டும். கிடைக்கின்ற ஊதியத்தில் நல்ல புத்தகங்கள், சினிமா டி.வி.டிக்கள் வாங்கி பார்க்கவேண்டும். முக்கியமாக வாழ்க்கையை நூலில் இல்லாமல் அதன் இயல்பில் ரசித்து வாழவேண்டும். பலரும் அப்படிசெய்யாதே, இப்படி செய்யாதே என்றெல்லாம் என்னிடமும் கூறுகிறார்கள். ஆனால் தோழர்களே அவர்கள் கூறுவதை நம்பாதீர்கள். வாழ்க்கை நரகமாகிவிடும். இறைவன் நமக்கு பல நல்ல விஷயங்களை கொடுத்திருக்கிறார். அவற்றுக்கு நாம் என்றும் நன்றி கூறுவதேயில்லை. ஆனால் துன்பங்களை மட்டும் கொடுக்கிறார் என்று புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. நல்லவை நிகழும் ஏன் என்ற கேள்வி நம்மிடம் வராது. அல்லவை நேரும்போது எப்படி கேள்விகள் அம்மா ஆட்சி ஊழல்போல பிய்த்துகொண்டு கிளம்புகின்றன. ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் கூட அண்மையில் படிக்கவில்லை. எப்படி என்னால் இப்படியெல்லாம் கூறமுடிகிறது? ஆனால் ஒன்றே ஒன்று கூறுவேன். அறம், தர்மம் என்பதெல்லாம் உடைபடுகின்ற காலம் இது. உங்களுக்கு எதுவும் பிடித்திருந்தால் பின்வருவது குறித்து கவலைப்படாமல் முடிந்தால் முன்னே யோசித்து செய்யுங்களேன். பிரச்சனைகள் கடுமையாக வராமல் கூட இருக்கலாம். மாறணும் இதை மாத்தணும் என்று கிளம்புவது ஆபத்தில் முடியும். மாற்றங்கள் ஒருநாளில் வருவதில்லை. ஆனால் ஏதோ ஒரு மனிதனின் மனதில்தான் முதலில் அது பிறக்கிறது. கூட்டத்திற்குள் மூர்க்கம் உள்ள அளவு விவேகம், நிதானம் இருக்கவே இருக்காது. கூட்டம் என்பது இயங்க அவசியம். சிந்தனை என்ற அளவில் தனிமனிதன் முக்கியம்.அப்பாடி இன்றைய தினத்தின் கருத்து கூறியாகிவிட்டது. விடைபெறுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக