மூவ் பண்ணுப்பா உள்ள


                                                        மூவ் பண்ணுப்பா உள்ள


         24ஏ அடிக்கடி அதாவது இருபது நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் அரசை முழுக்க நம்பி நாம் காத்திருந்தால் காலடியில் வேர்கள் முளைத்துவிடும். நானும் வொயிட் போர்ட் பேருந்தில் குறைந்த கட்டணத்தில் பயணித்துவிடலாம் என்றாலும் வாய்ப்பு கிடைக்கமாட்டேன்கிறது. எப்போதுமே டீலக்ஸ்தான் வருகிறது. 29சி எடுத்துக்கொள்ளுங்கள். ஏகப்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. முக்கியமான நேரத்தில் வொயிட் போர்ட் பேருந்தும் உள்ளது. ஆனால் 24ஏ  பேருந்தைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கனவுபோல. அன்று இரவு வெகுநேரம் காத்திருந்து பேருந்து ஏறினேன். கண்டக்டர் 'மூவ் பண்ணு உள்ள'  என்றார். கதை எங்கேயும் உள்ளது என்பார்களே. அப்படித்தான் ஒரு கதை தோன்றியது. கருப்பு ஏ எழுத்தின் மேல் சிவப்பு வட்டம் போடும் படம்தான். காதலிக்கும் பெண்ணும், ஆணும் பேருந்தில் செய்யும் சில சில்மிஷங்கள்தான்  படம். பயப்படாதீர்கள். உரையாடல்கள், சில தீண்டல்கள் என இந்தப்பகுதி மட்டும் நான் யோசித்தேன். மீதிப்பகுதி அவர்கள் வீடு சென்றடைந்தபின் தொடங்கும். அது என்னவென்று அனைவருக்கும் தெரியும்.  தலைப்பு 'மூவ் இன்'. பிரேஸர்ஸ்.காம்  உடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழக அளவில் நரி நட்சத்திரம் குழுமத்திற்கான தமிழக பிரிவு செயலாளராக இருக்கும் பழனிஅடிமை போல் மாறிவிடலாமா என்று கூட தோன்றுகிறது. திரைக்கதை மட்டும் நான் செய்யலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி எடிட்டிங் கொஞ்சம் கவனிக்கவேண்டும். இறுதிக்காட்சியெல்லாம் எனக்கு கவலையே கிடையாது. தொடக்கம் மட்டும்தான் என்னைப்பொறுத்த வரை மிக முக்கியமானது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்