மாநகரத்தில் வாழ்கிறேன்
ஐஸ்ஹவுஸ் குறிப்புகள்
ஐஸ்ஹவுஸ் குறித்த முக்கியமான பதிவு என்று ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைக் குறிப்பிட முடியும் என்று நினைக்கிறேன். அதில் இப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்களின் வாழ்வு குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ முற்படும் ஆங்கிலேயர் கூட சாதிப்பிரிவினையினால் ஒன்றும் செய்யமுடியாமல் குடிக்கு மெல்ல அடிமையாவார். அதிலும் வண்டி பஞ்சத்தினால் அடிபட்ட மக்களின் உடல் மீது ஏறிச்செல்லும் இடங்களெல்லாம் நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். மனமே பதறிவிட்டது. வாழ்க்கை அத்தனையையும் மீறி ஒரு கவர்ச்சியைக் கொண்டுள்ளதுதான் இல்லையா?
5
டீஷர்ட் போடுங்கள்
ஓபன் வார இதழில் சமுதாயத்தில் வெளிப்படையான பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வரும் பலரைப்பற்றி மொத்தம் 50 பேர் பற்றி எழுதியிருந்தார்கள். அதைப்படித்த செயின்ட் எல்எஃப் மேமிடம் இதுதான் உடையா இப்படித்தான் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்களா என்று பெண்ணுரிமை போராளி ஒருவரின் புகைப்படத்தைக்காட்டி அவரிடம் கேட்க, அவர் தடுமாறிவிட்டார். அவரே அன்று சிக்கனமான ஆனால் அவருக்குப் பிடித்த டீ ஷர்ட் (சீமான் பாணியில் தேநீர் சட்டை) அணிந்து வந்திருந்தார். அவர் என்ன சொல்வாரென்று அவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் பெரிதாக ஒன்றும் கூறவில்லை என்றாலும், இது போன்ற உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்க கூடாது என்று கூறினார். பெண்ணுரிமைப் போராளியின் முகம் கருத்து மிகவும் சோர்ந்துபோயிருந்தது. போட்டோஷாப் டச் அப் வேலைகள் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் இதற்கு முன் எப்படி இருந்திருக்கும்? ஆத்தாடி.. இதாம்ப்பா மெர்சல்ங்கிறது. 22 பீமேல் கோட்டயம் எனும் மலையாளப்படத்தில் ஒரு வசனம் வரும்.. பெண்கள் எப்போது ஆயுதங்களை கொண்டிருக்கிறார்கள் அதுதான் அவர்களின் பலமும், பலவீனமும் என்று சிறையில் ஒரு தமிழ்ப்பெண் ரீமா கல்லிங்கலிடம் கூறுவார். எனக்கு அதுதான் எஎஃப் மேமைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. உடை அணிவது ஒருவரின் உடல் இயங்குவதற்கு ஏதுவாக இருக்கவேண்டும். அடுத்தவர்களின் கவனத்தை தன் வசப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இயங்குவது நமக்கு நாமே பிரச்சனையை வலிய இழுத்துக்கொள்வது போலத்தான். ஆனால் நான் பனியன் வாசகங்களை ராம் கதாநாயகன் போல் தவறாகவெல்லாம் புரிந்துகொள்ளப்போவதில்லை. ஜாலியாக எடுத்துக்கொள்ளலாம். பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் படிக்கிறோம். பெண்களின் டீஷர்ட், அந்த வாசகம் எல்லாம் இல்லைனா நகரத்து வாழ்க்கையில் என்னைப்போல உள்ளவர்களெல்லாம் என்னதாம்பா செய்யறது? என்று பலரும் கேட்பார்கள். இளமை அதன்போக்கில் ஈர்ப்பானதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக