தயிர்சாதம்
தயிர்சாதம்
மம்மி மெஸ் போய் சாப்புடுப்பா என்று செயின்ட் கூறியபிறகு போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம். செரி என்று நண்பர் க. சு விடம் கூறிவிட்டு வேகமாக குளக்கரை சாலையில் நடந்தேன். அரக்க பரக்க செல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அலுவலக நிர்வாகி பி இரண்டு மணிக்குள்ளார வந்துருவியா என்று கேள்வி கேட்டுத்தான் சாப்பிட அனுமதித்தார். வேகமாக செல்ல நினைத்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட வள்ளுவர் கோட்டம் செல்லும் வழி அது. சாலை தாண்டி உள்ளே சென்று பத்து ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கோ என்று போஸில் நீட்டினால் எத்தனை என்றார் ஒரு பெண்மணி. எத்தனையா ஒன்னுதாங்க என்றேன். மூணு ரூபா எடு என்றார். சில்லறை கேட்கும் மனிதர்களுக்கு பெரிய தெம்பு ஏற்பட்டு விடுகிறது. தருவானா இருக்குமா பாப்போமே என்பதுதான் அது. தயிர்சாதம்தான் வாங்கினேன். நன்றாக கொதிக்கும் பதம். தயிர் சூடாக சாப்பிட்டால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை சாப்பிட்ட பின் தினமணி கதிரில் ஆயுர்வேத மருத்துவரின் பதில்களை படித்து தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லையென்றால் அருகில் ஓட்டக்கல் லேகியச்சாலையும் இருக்கிறது என்கிற தெம்பும் எதற்கு என்ன எப்படி சாப்பிட என்பதற்கு அண்ணன் ஆர்.எம் இருக்கிறார். அப்புறம் என்ன வேகமாக சாப்பிட்டேன். கறிவேப்பிலை அதில் இல்லை. கடுகு ஆறு இருந்தது. இஞ்சி இருந்தது கூடவே பச்சை மிளகாயும். மற்றபடி உப்பு எனக்கு சிறிது தேவைப்பட்டது. நகரத்தில் வயிறு நிறைக்கும் பணி குறை என்ன சொல்வது? மனிதர்களாக நகரத்தில் பசியோடு இருக்கமுடியாது. பசி தணிக்கும் ஏற்பாடு.

கருத்துகள்
கருத்துரையிடுக