மம்மி மெஸ்


                                                                மம்மி மெஸ்

            செயின்ட் இறுதியாக கூறிவிட்டார். ''இப்படி கருவாடா கெடக்காதீங்க சார். பணம் குறைவா இருந்தா  மம்மி மெஸ்ல சோறு தீருறதுக்குள்ள போயி சாப்பிட்டு வந்திருங்க''. எனக்கு திகிலெல்லாம் மம்மி மெஸ்லயே கடைசி வரை டோக்கன் வாங்க வைச்சிருவாரோன்னுதான். வேலைகளை இறுதி செய்துவிட்டு  ஜாலி டூர் கெளம்பிவிட்டார் ஆசிரியர். செயின்ட் ஏற்படுத்தி வைத்திருக்கிற காமெடிகளையும் பலரும் நம்புகிறார்கள். ஒருத்தர் பஞ்சாபிலிருந்து  ஆன்லைன்ல உங்க புத்தகத்தை படிக்க முடியுமா? என்று கேட்டிருந்தார். சும்மாவே அதை படிக்கமுடியாது என்று நான் மனதிலிருப்பதை எல்லாம் பேசிவிடமுடியுமா என்ன? சமாளித்து பதில் எழுதினேன். இணையதளம் வேலை செய்வதேயில்லை. ஆனால் எதற்கு அதை ஒவ்வொருதரம் அச்சிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதாவது கேட்டால் எல்எஸ் மேமை கேட்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். விவாதித்து நல்ல விஷயங்களை செய்வது நல்லதுதான். ஆனால் தாமதம் ஆகக்கூடாது இல்லையா? இப்போதே அதிக நாட்கள் ஆகிவிட்டன. நாமென்ன விகடனா? எளிதில் புத்தகங்களை விற்றுவிட? சித்தாந்தங்களை பேசி விவாதித்து விற்கும்போது அடுத்த இதழ் வெளியிட வேண்டிய நாளும் கடந்துவிடும். என்ன செய்வது? குருமா நடத்தும் வாய்ல மண் பத்திரிகையில் அம்பேத் குறித்து ஏதாவது எழுதுகிறார்களா என்று பார்த்தால் முழுக்க வளர்ந்துவரும் வாரிசு நடிகர் போல  முழுக்க குருமாவின் வண்ண வண்ணப் புகைப்படங்களாக இருக்கிறது. நான் கூட எம்.ஆர் கலர்லேப் புக்லெட் என்று நினைத்தேன். அப்புறம்தான் புத்தகத்தின் பெயர் வாய்ல மண். ஆத்தாடி... படத்தில் நடிச்சிட்டாப்பல அப்பறம் என்ன .. எட்றா ரோஸ் பவுடர என்றுதான் புகைப்படம் எடுக்கும்போதும், கள செயல்பாடுகளின் போதும் கூறுவார் போல.

கருத்துகள்