பெத்த கண்ணு பேரழகி!

                                                       பெத்த கண்ணு பேரழகி!






                காலையில் அலங்க மலங்க எழுந்தால் அறையில் உள்ள ஆந்திர வாலாக்களில் ஒருவர் மூச்சு பயிற்சி செய்துகொண்டிருந்தார். திடீரென்று இவர்களுக்கு தேர்வு தொடங்கினால் மட்டும் மூச்சு பயிற்சி நினைவு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. அது போதாதென்று தெலுங்கில் பவன் கல்யாணின் தமிழில் இளைய தளபதி நடித்த பத்ரியில் கிழங்கு தின்ற நாய் கத்துவது போல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது ஒருபாடல் வருமே  அந்த வர்ஷனில் அங்கே பவன் உடற்பயிற்சி செய்வார். அப்படியே அதே காட்சிகள் தமிழில் இருக்கும். அதைப்போட்டுக்கொண்டு ஷெல்பை பிடித்து அதைப் பெயர்த்து தரைக்கு கொண்டுவருவது போல புல் அப்ஸ் எடுத்து மிரட்சிக் குள்ளாக்குவது அடுத்த அவரது திட்டம்.  அறையில் இன்னும் இரு ஆந்திர வாலாக்கள் விடுமுறையில் இருப்பதால் மிரட்டல் அடி குறைவாக இருக்கிறது. இன்னும் பல மிரட்சிகள் காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.

            பேருந்தில் ஏறினால் அங்கும் இஸ்லாமிய பெண்களில் முகத்தையும் கண்களிலேயே பார்த்து ஓகே ஒரு தடவை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே செல்வேன். அவர்கள்தான் மல்லிகைப்பூ வைத்தாலும் அனைத்தையும் படுதா போட்டு சுத்திவிடுகிறார்கள். பெண்கள் இப்படி  என்றால் ஆண்களின் அத்தர் ஆளைக் கொல்கிறது. அப்போது அன்று என்று கண்டக்டர்  மலச்சிக்கல் ஏற்பட்டவர் போல முகத்தை வைத்து இருந்தார்.  இந்த மனுசன் வாழ்நாளில் எப்போதாவது சிரித்திருப்பாரா என்று கூட தோன்றியது. கல்லையும் உளி அசைக்குமா இல்லையா? திருத்தமான முகம், ஏகப்பட்ட முக சேஷ்டைகளுடன் ஒரு இளம்பெண் அவருடன் உரையாட உரையாட அன்னாரது முகம் கோல்ட் வின்னர் சூரியகாந்தி போல மலர்ந்துவிட்டது. பெண் கருமைதான் என்றாலும் பளபளக்கிற வசீகரம் கொண்ட கண்கள். நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். பல்வேறு பதற்றங்களுக்கிடையே சிரித்தபடியே பயணச்சீட்டு வாங்கிய பெண் நான் இறங்கும் நிறுத்தம் வரையில் அவர்தான். அழகி அழகிதான். இதோ படத்தில் இருக்கும் பெண்போலத்தான் அவர் இருந்தார். நல்ல ஆழமான கண்கள். எத்தனை விஷயங்களை பேசிவிடுகிறது நொடியில். கொஞ்சிக கொஞ்சிப்பேசியே அந்த கண்டகடரை இளக்கச் செய்துவிட்டாள். இது பெண்ணுக்குத்தான சாத்தியமாகிறதோ என்னவோ? நான் ஜோஸபின்னை நினைத்துக்கொண்டேன். அவளது உடல் மொழி என் முன்னே நிழலாடுகிறது. அவளும் அசரடிக்கிற சிரிப்பினைக் கொண்டவள். மனமதிரும் சிரிப்பினைக் கொண்டவள். இதயத்துடிப்பு காதருகே கேட்டதை அவளருகில் உணர்ந்திருக்கிறேன். மற்றபடி எந்த பெண்ணும் அதுபோல ஈர்க்கவே இல்லை. நகரத்தில் இதயத்தின் ஆழத்தில் புன்னகை கொண்டுள்ள ஒருமுகத்தை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? அந்த நாளே அவ்வளவு ரம்மியம் ஆகிவிடுவது போல உணர்கிறேன்.

கருத்துகள்