இடுகைகள்

குரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை குரான் புறக்கணிக்கவில்லை! - எழுத்தாளர் ஜியா அஸ் சலாம்

படம்
நேர்காணல் குரான் பெண்களை ஒதுக்கவில்லை! பெண்களை மசூதிக்குள் பொதுவாக அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் தனி இடங்கள் அங்கு உண்டு. இதுபற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாய் அஸ் சலாம் வுமன் இன் மஸ்ஜித்: எ க்வெஸ்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம். நீதிமன்றம், பெண்களை சபரிமலை போன்ற இடங்களில் அனுமதித்து உள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சரி, சரி அல்ல என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. மதம் பெண்களை அனுமதிக்கும்போது, அதனை ஆண்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பதே எனது கேள்வி. நீதிமன்றம் குரான் மற்றும் அரசியல் அமைப்பு சட்டப்படி பெண்களை அனுமதிப்பு ஏற்புடையதே. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெண்களின் உரிமைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்.  சுல்தான்கள் காலத்தில் இங்குள்ள பெண்கள் சிறப்பான கல்வித்தகுதியை அடைந்தனர். காரணம், அங்கு ஏராளமான மதரசாக்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அடிமையாக வேலை செய்து வந்த பெண்கள் கூட குரானைப் படிக்கும் அளவு கல்வி அறிவு பெற்றிருந்தனர். மொகலாயர்கள் காலத்தில் பெண்கள் மதரசாக்களையும், மசூதிகளையும் கட்டியது வரலாறு மூலம் தெரிய வர

கற்பைக் கேள்வி கேட்கும் திருமணச் சான்றிதழ்!

படம்
வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளாக போராடி, திருமணச்சான்றிதழில் உள்ள குமாரி என்ற சொல்லை நீக்கியுள்ளனர். குமாரி என்பது, கல்யாணப் பத்திரிக்கையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கு அரசின் திருமணச்சான்றிதழில் இருப்பது விவகாரமானது. காரணம், குமாரி என்பது பெண்ணின் கன்னித்தன்மையைக் குறிக்கிறது. 1974 ஆம் ஆண்டு வங்கதேச திருமணம் மற்றும் விவாகரத்து சட்டப்படி,  மேற்சொன்ன விஷயங்கள் கறாராக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமியர்கள் திருமணம் என்பதால், அரசு இவற்றை பெரிய மாறுதலுக்கு உட்படுத்தவில்லை. அங்கு செயல்படும் பிளாஸ்ட்,  மொகிலா பரிஷத், நாரிபோகோ ஆகிய அமைப்புகள் பெண்ணை குமாரி - திருமணமாகதவர் அல்லது கற்புள்ளவர் என்பதை மாற்றி ஒபிபாகிதோ என்ற வார்த்தையை அச்சொல்லுக்கு பதிலாக சேர்க்க விண்ணப்பித்தன. மேலும் அந்நாட்டு அரசியல் சட்டப்படி குமாரி என்று கூறுவது சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் படி தவறு என்றும் வாதிட்டு பொதுநல வழக்கைத் தொடர்ந்தன. இதில் உயர்நீதிமன்றம் அரசை இது பற்றிய ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யக்கூறியது. அதில்தான் குமாரி என்ற சொல்லை இனி சான்றிதழில் பயன்படுத்தவேண்டியதில்லை என்று தீ