இடுகைகள்

அனுபம்கேர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகராக இல்லை என்றால் வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன்! அனுபம் கேர்

படம்
          அனுபம் கேர்         அனுபம் கேர் , இந்திமொழி நடிகர் பொதுமுடக்க காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? இக்காலத்தில் உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை . நீங்கள் விரும்புகிற உறவுகள் , உணவுப்பொருட்கள் , வைஃபை ஆகியவைதான் அவை . நீங்கள் நடிகராக இல்லை என்றால் என்னவாக ஆகியிருப்பீர்கள் ? வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன் . நீங்கள் உங்களுக்கு ஆதர்சமாக நினைக்கும் நடிகர்களைக் குறிப்பிடுங்கள் ராபர்ட் டி நீரோ , திலீப் குமார் . உங்களுக்கு திரையில் சிறந்த மகனாக நடித்தவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள் ? 1995 ஆம் ஆண்டு என்னுடைய மகனாக ஷாருக்கான் நடித்தார் . உங்கள் மகளாக நடித்த நடிகையரில் யார் பெஸ்ட் ? பூஜா பட் , மந்தா நாகின் , பர்மிந்தர் நாக்ரா பத்து ரூபாய்க்கு குறைவாக நீங்கள் வாங்கிய பொருள் ? பார்லே ஜி பிஸ்கெட் , வடாபாவ் ஆகியவற்றை வாங்கினேன் . வடா பாவ் வாங்கிச்சாப்பிட உங்களுக்கு பிடித்த இடம் எது ? மெஹ்பூப் ஸ்டூடியோ கேண்டீன் . இந்துஸ்தான் டைம்ஸ்

ஆசிரியரிடம் நான் சொன்ன பொய் - அனுபம்கேரின் குரு மரியாதை!

படம்
பாஜக ஆதரவாளர், படுகொலைகளை ஆதரிப்பவர்  என பல தூற்றுதல்கள் இருந்தாலும் நாடகம், சினிமா கதாபாத்திர விஷயங்களில் அனுபம் கேரின் திறமையை யாரும் மறுக்க முடியாது. அப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர், டெல்லி நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர். சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக உருவாகிறார் என்பது புதுமையான ஒன்றுதானே. பத்து வயதில் எனது வாழ்க்கையை எழுதி வைக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கையை நூல் வடிவில் மக்களுக்கு வழங்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இன்று 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்கு பரிசாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் அண்மையில் தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் தேசிய நாடகப்பள்ளி காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது. நாடகம் பற்றிய ப்ராஜெக்ட். ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நேரம். ஆனால் என்ன காரணத்தாலோ அனுபமால் எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பிற்கான ஆசிரியர் உறுதியாக சொல்லிவ