இடுகைகள்

கோக்கோ காஃப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! கோக்கோ காஃப்

படம்
      கோக்கோ காஃப் கோகோ காஃப், அமெரிக்க டென்னிஸ் வீரர் மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! இப்படி சொன்னது யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? மதவாத கும்பலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மனித உரிமை போராளி என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இந்த கட்டுரையில் வாய்ப்பில்லை. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வாழும் வளரும் டென்னிஸ் நட்சத்திர வீரரான கோகோ காஃப்தான், மேலே தலைப்பில் உள்ளதை சொன்னவர். கோகோவுக்கு வயது பத்தொன்பதுதான். இப்போதே அவர் கறுப்பின மக்களுக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடுகளுக்கு எதிரான செயல்பாடு என்ன குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். டென்னிஸ் வீரர், தனது விளையாட்டை ஒழுங்காக   அமைதியாக விளையாடினால் போதும் என்று சிலர் கூறியதற்கு , அதை அநீதி என்று கூறும் துணிச்சலும் மனதிடமும் கோகோவுக்கு உண்டு. அவரது பாட்டி, 1961ஆம் ஆண்டு பள்ளியில் படித்தபோது பேஸ்கட்பால் வீரராக இருந்தார். ஆனால் பள்ளியில் படித்த ஒரே கறுப்பின பெண் அவர்தான் என்பதால், விதிகள் கேள்விகள் அதிகம் இருந்தன. இனவெறியின் உச்சமாக அவர் கழிவறையைப் பயன்படுத்துவதை கூட தடு