இடுகைகள்

ரா அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு

படம்
  பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு ரா அமைப்பு பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க முடியாது. இதுபற்றிய உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான். சீக்கியர்கள் கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்றுவிட

பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி

படம்
நேர்காணல் நவாப் பஹூம்தாக் புக்தி ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார்.  பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது? நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது. அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.  தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது