இடுகைகள்

கேட்டன் பரேக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோசடியாளரான கேட்டன் பரேக்குடன் கைகோத்த அதானி குழுமம்! பகுதி 7 - ஹிண்டன்பர்க் அறிக்கை தமிழாக்கம்

படம்
  ஒழுங்குமுறை அமைப்பான செபி,   செய்த அறுபது விசாரணைகளை ஆராய்ந்ததில், அதானி குழுமம் கடந்த இருபது ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவன ஆய்வாளர்கள் பேசியுள்ளனர்.   1999 தொடங்கி 2005 வரையிலான காலகட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபற்றி செபி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறியுள்ளது. இதுவரை செபி, அதானி குழுமத்தின் 90 நிறுவனங்கள் அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் என பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இந்த தடையில் அதானி குழும முதலீட்டாளர்களும் உள்ளடங்குவார்கள். செபி, அதானி முதலீட்டாளர்களுக்கு, முதலில் தடை விதித்தது. பின்னர் அந்த தண்டனை அபராதமாக மாற்றப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பிற முறைகேடுகள், மோசடிகள் பெரும்பாலும் விசாரணைக்கு வரவில்லை. அப்படி விசாரணைக்கு வந்தாலும்   வேண்டுமென்றே அவை தாமதப்படுத்தப்பட்டன. 1999-2001ஆம் ஆண்டு கேட்டன் பரேக், பத்து நிறுவனப் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தினார். இதற்காக அவர் பங்கு வ