இடுகைகள்

கோடரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!

படம்
          ஸிசோபெரெனியா சாமியார்! மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று. இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச...

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் ...