இடுகைகள்

சுந்தர் பிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அமெரிக்க அரசு இதுதொடர்பாக சட்டங

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து

கம்பீர சிஇஓக்களின் கல்லூரி காலம்! - சுந்தர் பிச்சை முதல் இவான் ஸ்பீகல் வரை

படம்
கற்க கசடற! கீழே நீங்கள் படிக்கப்போகிறவர்கள் அனைவரும் பெரும் நிறுவனங்களை நடத்துகிறவர்கள். ஆனால் அவர்கள் அ, ஆ என்றுதானே தொடங்கியிருப்பார்கள். அப்படி புகழ்பெற்ற நிறுவனத்தின் சிஇஓக்கள் என்ன படித்திருப்பார்கள், என்ன கற்றிருப்பார்கள், எங்கு வேலை செய்திருப்பார்கள் என்று பார்ப்போம்.... சுந்தர்பிச்சை அப்ளைடு மெட்டீரியல் இஞ்சினியர். கூகுளின் இயக்குநரான சுந்தர் பிச்சை எம்எஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலையிலும் எம்பிஏ படிப்பை பென்சில்வேனியா பல்கலையிலும் முடித்தார். பின்னர் அப்ளைடு மெட்டீரியல் நிறுவனத்தில் பொறியாளரானார். பின்னரே 2004 ஆம் ஆண்டில் கூகுளில் பொருட்களின் தயாரிப்புக்கான துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் திறமையால் கவரப்பட்ட ட்விட்டர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய இருநிறுவனங்களும் பொறுப்பை வழங்க முன்வந்தன. ஆனால் வாய்ப்பு கிடைத்த து என்னவோ கூகுளுக்குத்தான். 2015 ஆம் ஆண்டு லாரிபேஜ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதும் சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இயக்குநராக ஆனார். ஜெஃப் பெஸோஸ் பர்கர் விற்பனையாளர் இன்று உலகம் முழுக்க ஆச்சரியமாக பார்க்கும் அமேஸான் நிறுவனத்