இடுகைகள்

தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!

படம்
        ரோனி சிந்தனைகள் குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்? மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்... குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா,  பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம். உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யு...

மொழி,சாதி, மத, இன பாகுபாடில்லாத ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

படம்
         இனிப்பு மிட்டாயும் பள்ளி புத்தகங்களும்!  வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளைப் பின்பற்றி வாக்காளர் சமூகத்தை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான். இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவ...

பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

படம்
               குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்! உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள். வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை. சீக்கிய ...

பசுமைக் கட்சியின் வரலாறு, பின்னணி, சாதக, பாதகங்கள் - க்ரீன்பாலிடிக்ஸ் - ஜேம்ஸ் ராட்கிளிப்

படம்
      கிரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர்  டெமோகிரசி ஜேம்ஸ் ராட்கிளிப் மேக்மில்லன் பிரஸ் 235 பக்கங்கள் நூலில் மொத்தம் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. அவை அனைத்திலும் ஏராளமான சூழலியலாளர்கள் கருத்துகள், பசுமைக் கட்சி அரசியல் அதிகாரத்தில் நுழைந்த வரலாறு, அதன் தேவை, அரசின் இயக்கம் என நிறைய விஷயங்களைப் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தகவல்களா, சிந்தனைகளா அயர்ச்சியே ஆகிவிடுகிறது. பொதுவாக இடதுசாரிகளே, மெல்ல பசுமை சார்ந்து இயங்குவார்கள். பிறகு மார்க்சியத்தை மறுத்துவிட்டு முழுமையாக பசுமை அரசியலில் ஆலோசகர் அல்லது செயல்பாட்டாளராக, சிந்தனையாளராக மாறுவார்கள். சூழலியலின் அடிப்படை மார்க்சியத்திலிருந்தே தொடங்குகிறது. அதுவும் கூட வளமான மேற்கு நாடுகளில்தான் பசுமைக் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சு ப உதயகுமாரன் போன்றோர் பசுமைக்கட்சி என தொடங்கினாலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. சூழல் கவனத்தை இங்கு அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். அப்படி தொடங்காமல் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கினால், அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. சர்வாதிகாரமா, ஜனநாயகமா என கேள்வி கேட்டு நூல் எழுதப்பட்டு இருந்தா...

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்
       

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங...

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ...

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த க...

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். ...

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன...

டைம் வார இதழ் / செயற்கை நுண்ணறிவு சாதனையாளர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் - இறுதிப்பகுதி

படம்
  ராஜி ரம்மன் சௌத்ரி யி ஸெங் சீன அறிவியல் துறை, பேராசிரியர் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர். யுனெஸ்கோவில் ஏஐ சார்ந்த பாதுகாப்பு விதிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை வேண்டும் என கூறுகிற மனிதர். மனிதர்களின் மூளையைப் போல செயற்கை நுண்ணறிவை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார். வில் ஹென்ஷால்   ரம்மன் சௌத்ரி இயக்குநர், நிறுவனர் – ஹியூமன் இன்டெலிஜென்ஸ் முன்னாள் ட்விட்டர் ஊழியர். எலன் மஸ்கால் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு, எந்திரவழிக் கற்றல் கொள்கை சார்ந்த குழுவில் வேலை செய்தார். தற்போது ஹியூமன் இன்டெலிஜென்ஸ் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நான்காயிரம் ஹேக்கர்களை வைத்து சோதித்தார். இதன் வழியாக அதன் பாதிப்புகளை எளிதாக கண்டறிய முடிந்தது. ரம்மன் சௌத்ரிக்கு அமெரிக்க அரசு கொடுத்த ஆதரவால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.   குறைகளை கண்டறிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்ட...

ஹவாலா குற்றவாளியை திக்கு முக்காடச் செய்யும் அப்பாவி கணக்காளன்! பால தந்தானா - தெலுங்கு

படம்
  பால தந்தானா - தெலுங்கு பால தந்தனா தெலுங்கு ஶ்ரீவிஷ்ணு, கேத்தரின் தெரசா தமிழில் போடு தந்தானா தமிழ்ப்படம் யூட்யூப் சேனல் ‘’கெட்டது செய்றவங்களை கேட்வி கேட்கறதில்ல. ஆனா, நல்லது பண்றவங்கள கேள்வி கேட்கிறோம். இதுல என்ன நியாயம் இருக்கு. அதனால, சந்து மும்பைல என்ன பண்ணிட்டிருந்தான்னு நா கேட்கல’’ என படத்தின் இறுதியில் சசிரேகா மனதுக்குள் நினைத்தபடி சந்துவின் பின்னாலே நடந்த்து   வெளியே வருகிறார். உண்மையில் இது சுவாரசியமான இறுதிக்காட்சி. இதை வைத்து ஸ்பின்ஆஃப் படம் ஒன்றை எடுக்காம். சந்து மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என … அதுவும் சுவாரசியமாகவே இருக்கும். தெலுங்கில பால தந்தானா, தமிழில் போடு தந்தானாவாகியிருக்கிறது. ஸ்லோபர்னர் படம். மெதுவாகத்தான் கதையில் என்ன நடந்திருக்கிறது என தெரிந்துகொள்கிறோம். அதுவரை, வெப்சைட் செய்தியாளரான சசிரேகா போலவேதான் நாமும் இருக்கிறோம். பிரபாநியூஸ்.காம் என வெப்சைட் ஒன்றில் செய்தியாளராக சசிரேகா வேலை செய்கிறார். இவருக்கு செய்தி என்றால், மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். அப்படி பாடுபட்டு எழுதும் செய்திகளால் நிறைய பிரச்னைகள, மிர...