இடுகைகள்

இ்ந்தியா - வனக்கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களே இல்லாத வனத்தில் புலிகள் என்ன செய்யும்?

படம்
புலிகளுக்காக பழங்குடிகளை அழிப்போம் ! வனவிலங்கு காப்பகங்களிலுள்ள விலங்குகளை காப்பாற்றுகிறோம் என்று அரசும் , என்ஜிஓக்களின் செயல்பாட்டில் பழங்குடி மக்கள் தம் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர் . கடந்த ஜூனில் ம . பியைச் சேர்ந்த பழங்குடி மனிதர் ரூப்சந்த் சோன்வானே , விறகுகளை காட்டில் சேகரித்த குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகளால் அடித்து கொல்லப்பட்டு உடலையும் எரித்துள்ளனர் . மியான்மரில் 700 குடும்பங்கள் வனங்களிலுள்ள வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . அசாமிலும் வனவிலங்கு காப்பகத்திற்காக பழங்குடிகளின் குடியிருப்புகளை , பள்ளிகளை அடித்து நொறுக்கியுள்ளது அம்மாநில வனத்துறை . கர்நாடகா , சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசம் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நாகர்கோல் , அச்நாக்மர் , உடந்தி , தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் , மேல்ஹட் , பென்ச் ஆகிய இடங்களில் வனவிலங்கு காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது . தேசிய புலிகள் காப்பக ஆணையம் (NTCA), பழங்குடிகளை தாய்நிலத்திலிருந்து நகருக்கு விரட்டி அவர்களின் கலாசாரத்தை அழிப்பதோடு மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோகிறது . 19 ஆம் நூற்ற