இடுகைகள்

பருவகாலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள்!

படம்
  உலகமெங்கும் மாறும் காலநிலை!  ஆண்டுதோறும் ஜப்பானின் ஒகினாவா நகரில், வசந்தகாலத்தின் போது செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும். பூக்கள் மெல்ல மலர்வது ஒகினாவாவில் தொடங்கி டோக்கியோ நகரம் வரை நீளும். அந்நாட்டில் மலர்ந்த பூக்களைக்  காண்பதை ஹனாமி (Hanami festival)என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை  செர்ரி பூக்கள் மலர்ந்து வந்தன. ஆனால், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியே, ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரி பூக்கள் முழுமையாக மலர்ந்துவிட்டன. இப்படி பூக்கள் வேகமாக மலர, காலநிலை மாற்றமே காரணம். பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவது, உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  “சூழலின் இசைவு நிலைக்கு, காலம் முக்கியமான காரணி” என்றார் கென்யாவிலுள்ள  ஐ.நா. சூழல் திட்டத்தைச் (UNEP) சேர்ந்த மார்டென் கப்பெல்லெ.   தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றின் சூழல் பங்களிப்பு பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பினாலஜி (Phenology) என்று பெயர். 1853ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தாவரவியலாளர் சார்லஸ் மோரென் (Charles morren), பினாலஜி என்ற வார்த்தையை முதன்முறையாக அறிமுகம் செய்தார். பின்னாள

பருவகாலங்களால் நம் உடல்நிலையில் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையா? பொய்யா?

படம்
                1. உடல் வலிக்கும் , பருவ காலங்களுக்கும் தொடர்பிருக்கிறது . ரியல் : வீட்டில் உள்ள உங்கள் தாத்தா , பாட்டி ஆகியோர் மழை , வெயில் , பனி பல்வேறு பருவக்காலங்களிலும் முதுகுவலி , மூட்டுவலி என்று புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் . வலிக்கான ஆதார காரணம் பருவகாலமல்ல . உடலில் ஏற்படும் வலியை அது ஊக்கப்படுத்தலாம் . உடலில் வலியை அது உருவாக்குவதில்லை என்பதே ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் அறிக்கை சொல்கிற தகவல் . முதுகுவலி , மூட்டுவலி ஏற்படுவதற்கான முதன்மையான காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்தால் , அவர்கள் பருவகாலங்களை குறைசொல்ல வேண்டியிருக்காது . அரிதாக குறிப்பிட்ட பருவச்சூழல் , மூளையிலுள்ள செரடோனின் சுரப்பை அதிகரிக்கிறது . இதனால் சென்சிடிவ்வான உடலைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு . 2. கிராஷ் டெஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படும் மாடல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன . ரியல் : கார்களில் ஏற்படும் விபத்துகளில் மனிதர்களின் இறப்பைக் குறைக்க டம்மி மாடல்கள் உதவுகின்றன . இவற்றைப் பயன்படுத்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைகள