இடுகைகள்

தமிழர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை திமுக, காங்கிரஸ் தடுத்துக்கொண்டே இருக்கிறது! - எல்.முருகன், பாஜக

படம்
  எல்.முருகன்- TOI எல். முருகன் பாஜக தலைவர் உங்கள் கட்சி சமூக விரோதமான பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே? எங்கள் கட்சியில் உறுப்பினராக சேர ஒருவர் மிஸ்டுகால் கொடுத்தாலே போதும். இதன் காரணமாக உறுப்பினர் தவறான காரியங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கள் குற்றத்தொடர்பு கொண்டவர்களோடு பணியாற்றவில்லை.  கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை இருந்ததே? இன்று அந்த விஷயம் மாறியுள்ளது. அதனால்தான் மீனவர்கள், நடிகர்கள் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். வெறுப்பு பிரசாரத்தை திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். இனிமேல் இந்த வெறுப்பு பிரசாரம் மக்களிடையே செல்லாது.  எத்தனை தொகுதிகளில் வெல்வோம் என நினைக்கிறீர்கள்? இருபது தொகுதிகளை வெல்வோம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முத்திரை பதிக்கும். வெல்வதைப் பொறுத்து ஆட்சியில் பங்கேற்பதை மேலிடம் முடிவு செய்யும்.  நடக்கவிருக்கும் தமிழக தேர்தலை தேசப்பற்று கொண்டவர்களுக்கும் தேச விரோதிகளுக்குமான போர் என்று  கூறியது எதற்காக? இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல துணைநின்றது திமுகதான். அப்போது ஆட்ச

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப

தமிழர்கள் தம்மை கண்டறிய ஓர் நூல்! - கீழடி - வரலாற்று பொக்கிஷம்!

படம்
கீழடி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மதுரை மற்றும் சிவகங்கை அருகிலுள்ள எல்லைப்பகுதியான கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய விரிவான நூல் இது. தொல்லியல் துறை கமிஷனரான உதயசந்திரன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து, பல்வேறு தொன்மைப் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நூல் முழுக்க அடிக்கடி சொல்கிறார்கள். இதற்குப் பின்னணியில் அதை மறுப்போரின் குரல்கள் அழுத்தமாக இருக்கலாம். அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள்,  பானைத் துண்டுகள் என பலவற்றையும் பிரமாதமாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். டிரோன் விமானங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நண்பர் கூறினார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் கல்வி அறிவு பெற்றார்கள் என்பதை தகர்ப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை முக்கியமாக கொண்டால் வரலாற்று நூலை நாம் திருத்தி எழுத வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு கீழடி ஆய்வு முக்கியமானது. மத்திய அரசின் தலையீட்டால் ஆய்வை மத்திய தொல்லியல்