இடுகைகள்

நெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்பந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் லாபம்!

படம்
  விவசாயத்தோடு கைகோக்கும் தொழில்நுட்பம்! 2013ஆம் ஆண்டு ஹரியாணாவின் குர்கானில் பார்த்து வந்த தகவல் தொழில்நுட்ப பணியை விட்டு விலகினார் சச்சின் காலே. அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டனர்.  அப்போது சச்சினுக்கு, அவரின் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. நீ ஏன் பிறருக்காக உழைக்கவேண்டும். உனக்காக உழைக்கலாமே என்ற வாசகத்தை நினைவில் கொண்டு, ”விவசாயம் செய்யப்போகிறேன்” என்றார்.   விரைவிலேயே தனது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்பினார். சச்சினின் குடும்பத்திற்கு சொந்தமாக  24 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் செய்த முதல் ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட தவறுகளை விரைவில் சரிசெய்துகொண்டார். பருவகாலங்களில் நெற்பயிர்,  பிற காலங்களில் காய்கறிகளையும் பயிரிட்டு வென்றார். தனது விவசாய முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு கூற  2014ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.  சச்சின் காலே, ஒப்பந்த முறை விவசாயத்தை பற்றி ஆய்வு செய்து, அதைப்பற்றி விவசாயிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். சச்சினின் செயல்பாட்டால், தற்போது விவசாயிகளின் நிலங்களில் ஆண்டு முழுவதும

உலகின் முக்கியமான நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்!

படம்
நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் பெருமளவு நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரிசி வகை உணவுகள் இங்கு அதிகம்.  ஆனால் காலப்போக்கில் பல்வேறு மரபு அரிசி வகைகளில் மகசூல் குறைவு , சத்துக்கள் பற்றாக்குறைவு, பருவநிலை வேறுபாடுகள் ஆகிய பிரச்னைகள் எழுந்தன. இதனால், பல்வேறு நாடுகளின் அரசும் இதற்கான ஆராய்ச்சிக்கு உதவின.  அரிசியில் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளை மரபணு மாற்ற முறையில் சேர்க்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இப்படி கிடைத்த அரிசி ரகங்களால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இன்றும் அரிசியில் பல்வேறு விட்டமின்களைச் சேர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஆராய்ச்சி செய்து வரும் முக்கிய நிறுவனங்களைப் பார்ப்போம்.  சுவிட்சர்லாந்து ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Swiss Federal Institute of Technology (Zurich))  1855ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம்.  உணவுப்பயிர்களில் இரும்புச் சத்தைச் சேர்த்து அதனை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்ற முயன்று வருகிறது. இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து மற்றும்  பீட்டா

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்!

படம்
  நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரில் ஏற்படும் நோய்த் தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும்.  நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.   முட்டை ஒட்டுண்ணிகள்,  கிரைசோபா,   குளவி இனங்கள்,  தட்டான் இனங்கள்,  பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி, சிலந்தின இனங்கள்  ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும்.  தன் வாழ்நாளில் கிரை