காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!
காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை! சத்தீஸ் மாநிலத்திலுள்ள ராய்பூர் விமானநிலையம். இங்கு ஆதிவாசிகளின் கலையை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் சிலைகள், ஓவியங்கள் உள்ளன. ஆனால், நிஜத்தில் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மீது மாநில, ஒன்றிய அரசுக்கு அக்கறை உள்ளதா என்றால் கிஞ்சித்தும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆதிவாசி மக்கள் காவல்துறை, மத்திய ரிசர்வ் படையினரால் தாக்கப்பட்டு, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கும், அரசுக்குமான போர் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல, பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள்தான். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் பழங்குடி முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் பதவி ஏற்றார். அந்த நொடி முதலே நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல், ஆதிவாசி மக்களை கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் அமைதி பேச்சுவார்த்தை என்று வினோதமான சொல்லாடலை ஊடகங்கள...