இடுகைகள்

பைடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன்

 file:///home/anbarasu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/3.jpg யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன் யூக்கு டூவு என்ற வலைத்தளம்தான் சீனாவில் பொழுதுபோக்கு வீடியோக்களில் நாற்பது சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதற்குப்பிறகுதான் பைடு, டென்சென்ட்டெல்லாம் வருகிறது. 2014ஆம் ஆண்டே இதில் 500 மில்லியன் பயனர்கள் இருந்தனர். யூக்கு டூவைத் தொடங்கியவர் விக்டர் கூ. இவர் ஹாங்காங்கை பூர்விகமாக கொண்டவர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் படித்தவர். எம்பிஏவை ஸ்டான்போர்டில் படித்தவர், முதலீட்டு நிறுவனமான ரிச்சினா குழுமத்தில் பணியாற்றி வந்தார். 1999ஆம் ஆண்ட சீனாவில் இணையம் பெரிதாக வளரவில்லை. அப்போது சோகு என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். தனக்கென தனியாக சொந்த நிறுவனம் தொடங்கும் ஆசை இருந்தது. 2005ஆம் ஆண்டு யூக்கு நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. 2010ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதன் போட்டியாளரான டூவு.காம் நிறுவனத்தோடு இணைந்தது. சீனாவிலேயே இரண்டாவது பெரிய ஆன்லைன் வீடியோ சேவை நிற...

சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

படம்
            சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன் வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வ...

செயற்கை நுண்ணறிவில் சாதித்த தொழிலதிபர்கள் அறிமுகம்!

படம்
  ராபின் லீ, இயக்குநர், பைடு ராபின் லீ இயக்குநர், தலைவர், துணை நிறுவனர் – பைடு சீனாவின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கணிக்கும் தொழில்நுட்பவாதி. கூகுளை பிரதியெடுத்து பைடு எனும் தேடுதல் எந்திரத்தை உருவாக்கியவர், இப்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு பாட்களில் அமேஸானின் அலெக்ஸா போல ஷியாவோடு என்ற பாட்டை உருவாக்கி பைடு விற்று வருகிறது. 2000ஆம் ஆண்டு தொடங்கி ஏஐ ஆராய்ச்சியில் ராபின் லீ இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, எர்னி பாட் என்பதை ராபின் லீ உருவாக்கினார். இந்த கருவி, சீன அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது மகிழ்ச்சியான விஷயம். ராபின் லீ அரசின் செயற்கை நுண்ணறிவு திட்ட அமைப்பில் கூட உறுப்பினராக இருக்கிறார். பைடுவிற்கு தற்போது மாதம்தோறும் 677 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 48 மில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் பைடு, தொடக்கத்தில் மைக்ரோசிப்களுக்கு அமெரிக்க நிறுவனமான என்விடியாவை சார்ந்தே இயங்கியது. ஆனால் அமெரிக்க அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இப்போது உள்நாட்டில் தனக்கு தேவையான சிப்களை தானே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறத...

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

படம்
  பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட்   டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை க...