இடுகைகள்

ஒருநாடு ஒரே வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகள் இணைப்பு- பலமா, பலவீனமா?

படம்
நியூஸ்18 வங்கிகள் இணைப்பு பொருளாதாரத்தை பலப்படுத்துமா? அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். இதில் முக்கியமானது, 27பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து 12 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஆகும். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வங்கி இணைப்பு அறிவிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் மாதத்தில் தேனா, விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதற்கு முன்பு, பாரத வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.  ”பலவீனமான வங்கிகளாக தனித்தனியாக இருப்பதற்குப் பதில், ஒருங்கிணைத்தால் பலம் பொருந்திய ஒரே வங்கியாக மாறும் ”என மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். இதில் கூறாத உண்மையும் ஒன்று உண்டு. அது கடன்சுமைதான். விஜயா வங்கி, வாராக்கடன் குறைவாகவும், லாபம் ஈட்டல் அதிகமும் கொண்டது. ஆனால் தேனா வங்கி, வாராக்கடன் விகிதம் அதிகம் கொண்டது. பரோடா, விஜயா ஆகிய இரு வங்கிகளும் தேனாவுடன் இணைக்கப்படும்போது, தேனா வங்கியின் வாராக்கடன் சுமையையும் மற்ற இரு வங்கிகள் பகிர வேண்டி வரும்.  வங்கிகள் இணைப்பு என்பது மின்னஞ்சல் இணைப்பு