மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை
மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை நண்பர்களே, ஓமியோபதி முறையைப் பற்றி பேசுவது எனது சொந்த அனுபவம் மற்றும் வாசித்த சில ஆங்கில, தமிழ் மொழி நூல்களை மையமாக வைத்து மட்டுமே. எனவே, ஓமியோபதியை தேர்ந்தெடுக்கும்போது சரியான மருத்துவர் உதவியுடன் மருந்துகளை உண்ணுங்கள். வைட்டாலிட்டி என்பதை உயிர்சக்தி என மொழிபெயர்ப்போம். அதாவது, நாம் பிறக்கும்போது, நம் உடலை பாதுகாக்கும் சக்தி உடலோடு உருவாகிறது. இதுவே, பல்வேறு நோய்கள் வந்தாலும் கூட அதில் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த சக்தி நோய்கள் வரும்போது பாதிக்கப்படுகிறது. அதை தீர்க்கும் முயற்சியில் செலவாகிறது என்று சொன்னாலும் சரிதான். உயிர்சக்தி என்பது ஒருவரின் ஆயுளை தீர்மானிக்கிறது. ஒவ்வாமை பிரச்னை என்பதை ஒருசமயம் மறந்து நூடுல்ஸில் நிலக்கடலை போட்டு இறுதியாக முட்டையை மேலே ஊற்றி ஆப்பாயில் போல வைத்து சாப்பிட்டேன். உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடலுக்கு ஒரு உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதை வெளியேற்ற இரு வழிகள் உண்டு. வாந்தி, பேதி. இரண்டுமே இரவு வேளையில் ஏற்பட்டது. பிறகு, அதையொட்டி ஒருவாரம் காய்ச்சல் வந்ததில் ஒவ்வாமைக்கான சித்த...