இடுகைகள்

சபாபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை இருக்கிறது? - கடிதங்கள்

படம்
               பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை? 19.10.2020 அன்புள்ள சபா , நன்றாக இருக்கிறீர்களா ? இக்கடிதம் உங்களை வந்து சேரும்போது கொரோனா பாதிப்பு குறைந்து அறைக்கு மீண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . நீங்கள் காதலித்த பெண்களைப் பற்றி பேசும்போது மனதில் ஒரு கேள்வி தோன்றியது . ஒரு பெண்ணுடன் கூடவா மனது ஒட்டவில்லையென . குறிப்பிட்ட தேவையைக் கருதித்தான் உறவை வளர்கிறார்களா என்றும் புரியவில்லை . நீங்கள் உங்கள் பார்வையில் பெண்களைப் பற்றி சொன்னீர்கள் . அவர்கள் பார்வையில் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ ? மனிதர்களின் இருட்டான உளவியல் பக்கம் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது . அதனால் , அசுரகுலம் நூலை எழுதியபோது , கொலை செய்த மனிதர்களின் மனநிலை என்னை பெரிதும் பார்த்தேன் . எனோலா ஹோல்ம்ஸ் என்ற படம் ஆங்கிலப்படத்தை பார்த்தேன் . துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் தங்கை பற்றிய படம் இது . எனோலா , தனது வாழ்க்கையை சுதந்திரமாக எப்படி வாழத் தொடங்குகிறாள் என்பதை படம் நகைச்சுவையாக விவரிக்கிறது . படத்தில் எனோலாவாக நடித்த நடிகைதான் இதன் தயாரிப்பாளரும் . கூட . போனில் கர ப

சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  இனிய நண்பர்களுக்கு,  எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.  http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file  

இஸ்ரோ சிவனும், மத அடையாளமும் - சந்திப்போமா - கடிதங்கள்

படம்
மத அடையாளங்கள் அவசியமா? அன்புள்ள நண்பர் சபாபதிக்கு , வணக்கம் .   உங்கள் உடல்நலமும் , மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன் . நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன் . ஆனால் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் , அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன் . மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது . இது என்னுடைய கருத்து . இஸ்லாமியரோ , கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன் . குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும் . அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன . நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன் . அது பெரிய விஷயமில்லை என்றீர்கள் . எனக்குப் அப்படிப்படவில்லை . இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல . சேட்டன் பகத்தின் இந்தியா பாச

சந்திப்போமா - அன்பரசு - சபாபதி கடிதங்கள்

படம்
3 அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கடிதம் எழுத தாமதம் ஆகிவிட்டது . அலுவலகம் , ஹாஸ்டல் என அலைந்து திரிகிறேன் . இந்த அவதிதான் பிரச்னை . தனி அறைக்கு வந்து சில பொருட்களை வாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ரெடி ஆகிவிட்டேன் . வேறுவழி ஏதும் இல்லை . படிக்கின்ற மாணவர்களோடு சேர்ந்து இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் அழுத்தமாக இருக்கிறது . இரவு முழுவதும் விளக்கு எரியவில்லையென்றால் , என் அருகிலுள்ள படுக்கைக்காரர் பதற்றமடைந்து விடுகிறார் . எப்படி இங்கே தங்கியிருப்பது என நினைத்தேன் . எப்படியோ நான் முதலில் வேலை செய்த பத்திரிகையில் இருந்த நண்பர் எனக்கு அறையைப் பிடித்து தந்துவிட்டார் . சிறிது நிம்மதியாக இருக்கிறது . கவச்சம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன் . வெகுளியான நாயகன் , பேராசை பிடித்த நாயகி என்ற ஒன்லைனில் கதை பயணிக்கிறது . டான்சையை எட்டி உதைப்பது ஆடி பீதியைக் கிளப்பியவர்தான் இந்தப் படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ் . அவரின் ரியாக்ஷன்களைப் பார்க்க சகிக்கவில்லை . சொத்துக்காக நடைபெறும் சதியும் , துரோகமும்தான் படத்தின் கதை . சில ட்விஸ்டுகள் நன்றாக இருக்கின்றன . ஆனால் அவை