இடுகைகள்

கென்னத் கிளார்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதி, மதம், இனம், நிற ரீதியான வேறுபாடுகள் எப்படி குழந்தைகள் மனதில் உருவாக்கப்படுகின்றன? - கென்னத் கிளார்க், மாமியா

படம்
  கென்னத் கிளார்க்  அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். பனாமாவில் பிறந்தவர் பின்னாளில், நியூயார்க்கின் ஹார்லேமிற்கு நகர்ந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது தனது வாழ்க்கைத்துணையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினர் இவர்கள்தான். ஹார்லேமில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான மையங்களை தொடங்கி நடத்தினர்.  கென்னத் கிளார்க், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.  முக்கிய படைப்புகள் 1947 ரேஷியல் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் பிரிஃபெரன்ஸ் இன் நீக்ரோ சில்ட்ரன் 1955 ப்ரீஜூடிஸ் அண்ட் யுவர் சைல்ட் 1965 டார்க் கெட்டோ 1974 பாதோஸ் ஆஃப் பவர் சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்பது, குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த மக்களை தாழ்ந்தவர்கள் என கூறுவது என கென்னத் கிளார்க் கூறினார். சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாடுகளை ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் நேரடியாக ஊக்குவிப்பதி