இடுகைகள்

விக்ரம் சாராபாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரோ - செய்த சாதனைகள் - இந்தியா 75

படம்
  இஸ்ரோ - சாதனைகளின் வரலாறு 1962  விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி - இன்கோஸ்பார் அறிவியலாளர் சாராபாயால் உருவாக்கப்பட்டது.  1963 நவம்பர் 21  தும்பாவில் சவுண்டிங் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் ஏவினார்கள் 1969 ஆகஸ்ட் 15  இஸ்ரோ அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.   1975 ஏப்ரல் 19 இந்தியாவின் முதல் செயற்க்கோளான ஆர்யபட்டா உருவாக்கப்பட்டு செலுத்தப்பட்டது.  1971 ஸ்ரீஹரிகோட்டாவில் ஷார் மையம் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் பெயர் எஸ்டிஎஸ்சி.  1977 ஜனவரி 1  செயற்கைக்கோள்களால் கிராமங்களிலும் டிவி ஒளிபரப்பு கிடைத்தது.  1979 ஜூன் 7  பூமியைக் கண்காணிக்கும் பாஸ்கரா என்ற சோதனை முறையிலான செயற்கைக்கோள்  விண்ணில் ஏவப்பட்டது.  1979 ஆகஸ்ட் 10 எஸ்எல்வி 3 முதல்முறையாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுவும் சோதனை முறையிலான முயற்சிதான்.  1981 ஜூன் 19  ஏரியன் விண்வெளி ராக்கெட்டில் ஆப்பிள் என்ற தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  1987 மார்ச் 24 எஸ்எல்வி மேம்படுத்தப்பட்ட வடிவில் உருவாக்கப்பட்டு அறிமுகமானது.  1993 செப்டம்பர் 20 பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது

விண்வெளியில் இந்தியாவின் யுரேகா சாதனைகள் ! இந்தியா 75

படம்
  இந்தியாவின் யுரேகா தருணங்கள்! இந்தியா 75 சிறந்த அண்டைநாடு இதற்கு இந்தியாவைத்தான் அடையாளமாக சொல்லவேண்டும். அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை உருவாக்க பல்வேறு பிரயத்தனங்கள் செய்து முதலீடு செய்து கோட்டை விட்டாலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. இருக்கும். 1971ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு இந்தியா உதவி செய்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றார். அகதிகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் செல்வதற்கும் உதவினார். பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறல்கள் குறித்த உலக நாடுகளின் கருத்துகளையும் கவனப்படுத்தினார். சோவியத்துடன் ஒப்பந்தங்களை செய்தார். மதம் சார்ந்த நாடு என்பதை இந்தியா, தனது செயல்பாடுகளால் மாற்றியது என மேற்சொன்ன சம்பவங்களை வைத்து உறுதி செய்யலாம்.  இறுதியாக ஜெயம்! 1961ஆம் ஆண்டு கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து இந்திய அரசு மீட்டது. இதற்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிட்டனர். இப்போராட்டத்தில் ஏழு ராணுவ வீர ர்கள் பலியானார்கள். இந்த வெற்றியின் மூலம் 450 கால ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்தது. 36 ம

பிட்ஸ் எக்ஸ்ட்ரா - சந்திரயான் 2 புதிய தகவல்கள்!

படம்
பிட்ஸ் - சந்திரயான் 2  சந்திரயான் 2 விண்கலனில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகியவையே அவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக, லேண்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் 2 வுக்கான அல்காரிதத்தை முழுக்க இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எழுதி உருவாக்கி உள்ளனர். சந்திரயான் 1 போன்று இல்லாமல் சந்திரயான் 2 நிலவின் தரையில் சுமுகமாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர் விக்ரம், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் பிரக்யான் மூலம் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்யப்படவிருக்கின்றன.  சந்திரயான் 2 இல் செயல்படும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். சந்திரயான் 2 நிலவின் தரைப்பரப்பை ஆராய்வதோடு அதன் சூழலையும் ஆராயும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் வட்டப்பாதையில் நூறு கி.மீ. தள்ளி இருந்தாலும் லேண்டர், ரோவர் செய்யும் சோதனைகளை ரிமோட் முறையில் அறிய முடியும். சந்திரயான் 2 வில் உள்ள பல்வேறு ஆய்வுப் பொருட்கள் மூலம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம