இடுகைகள்

சூடான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு - டொம்னிக் லோபாலு

படம்
  டொம்னிக் லோபாலு டொம்னிக் லோபாலு தடகள வீ ரர் தெற்கு சூடானில் வாழ்ந்த டொம்னிக், அங்கு நடந்த போரால் வடக்கு கென்யாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். பிறகு அங்கிருந்து தப்பியவர், நைரோபிக்கு தெருவுக்கு வந்தார். அகதிகளின் விளையாட்டுக்குழுவை   அடையாளம் கண்டார். 2017ஆம் ஆண்டு டொம்னிக், ஒலிம்பியன் என்ற அகதி விளையாட்டுக்குழுவில் சேர்ந்தார். பிறகு, அந்த குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றபோது, அங்கே இருந்து விலகித் தப்பியவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என முயன்றார். 24 வயதாகும் டொம்னிக் தனது நாட்டுக்காக விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முயல்கிறார். அவரிடம் பேசினோம். ஏமாற்றம் அடையும்போதும எப்படி நேர்மறையான எண்ணங்களை மனநிலையை தக்க வைத்துக்கொள்கிறீர்கள்? பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதுமட்டுமே முடிவு கிடையாது. நான் எனது கனவுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன். விளையாட்டு வீரராக உங்கள் கனவு என்ன? ஒலிம்பிக் அல்லது உலக போட்டிகள் ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதுதான். விரைவில் ஏதாவது போட்டிகளில் பங்கேற்பேன் என நினைக்கிறேன். பதக்கம் வெல்வதை எனது கன