இடுகைகள்

அவசர உதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெஞ்சின் ஓரமாய் வலி! - குடும்ப நோய் வரலாறு காரணமா?

படம்
  இதயநோய் ஏற்படுபவர்களின் குடும்ப வரலாற்றை முன்னதாக அறிந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட்  அக்.2021 இதழின் ஆய்வு கூறியுள்ளது.  கேரளத்தில் 750 குடும்பங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதயநோய் தொடர்பான பாதிப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். இவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தேவை என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  ஐம்பத்தைந்து வயதுக்கு முன்னதாகவே ஒருவருக்கு இதயநோய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என கண்டுபிடிப்பது அவசியம். அப்படி கண்டுபிடித்தால், அவருக்குள்ள 1.5 முதல் 7 சதவீத ஆபத்தை தவிர்க்க முடியும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வு கேரளத்தில் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்டது.  சுகாதார பணியாளர்கள் 368 குடும்பங்களைச் சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்யவும், மது, புகையிலையை பயன்படுத்துவதை கைவிடவும் கூறினர்

அரிதினும் அரிய ரத்தம்! - எப்பிரிவு தெரியுமா?

படம்
அரிதினும் அரிய ரத்த வகைகள்! ரத்த வகைகளை பொதுவாக நீங்களே அறிவீர்கள். ஏ, பி, ஓ, ஏ பாசிட்டிவ், பி பாசிட்டிவ்,  நெகட்டிவ் என குறிப்பிடுவார்கள். இதனைக் கூற இதிலுள்ள ஆன்டிஜென் விஷயங்கள்தான் காரணம். ரத்த செல்களின் மேல் கோட்டிங்காக இருப்பதுதான் ஆன்டிஜென்கள். இதில் ஏ,பி முதன்மையானவை. இதில் ரீசஸ் டி எனும் ஆன்டிஜென் அதிகம், குறைவு என்பது மட்டுமே கணக்கில் கொண்டு ரத்த வகை பிரிக்கிறார்கள். உலகளவில் 35 ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை வகை இருந்தால், அதனைச் சொன்னால் நோயாளிக்கு கூடுதலாக காய்ச்சல் இரண்டு டிகிரி எகிற வாய்ப்பிருக்கிறது. எனவே சுருக்கமாக அ,ஆ போல ஏ,பி,ஓ என்று குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆன்டிஜென்கள் நம் ரத்தத்தில் உண்டு. அதில் நாம் 35 வகைகளை மட்டுமே ரத்தப்பிரிவாக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களது ரத்தப்பிரிவிலுள்ள ஆன்டிஜென், உலகிலுள்ள 99 சதவீத மனிதர்களிடையே இல்லாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த ஸ்பைடர்மேன். ஆம். அரிதினும் அரியவர். ரீனல்(Rhnull ) எனும் ரத்தப்பிரிவு உலகிலேயே அரிதானது. காரணம் இந்த ரத்தப்பிரிவுக்கு ரத்தம் அளிக்க உலகிலேயே ஒன்பது பேர்தான் தயாரா