இடுகைகள்

பெயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

படம்
  வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை   வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்   செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்   ஜாக்கிரதை தேவை.   பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது நல்லது. பொது விவகாரங்

இந்திரா நகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆதி திராவிடர் தெரு - அனுசுயாவின் சுயமரியாதை முயற்சி

படம்
  பெயர் மாற்றம் ஏற்படுத்தும் சமூக மாற்றம்! ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்கள் நாளிதழ்களில் படிக்க எப்படி இருந்தாலும்   அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? சமூக அந்தஸ்து சார்ந்து பார்க்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை வகுப்பறையில் அல்லது பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் கூறப்படும்போது தர்மசங்கடமாக உணர்வு எழக்கூடும். அதனால்தான் தலித்துகள் தங்கள் பெயர்களை நாகரிகமாக வைத்துக்கொள்வதோடு சாதியையும் வெளியே தெரிவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி கற்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தபிறகு தங்கள் சமூகம் சார்ந்து பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் சாய்பாபா, ஐயப்பன் கோவில், மூகாம்பிகை கோவில் என சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தனது   அந்தஸ்தை மேல்சாதிக்கு இணையாக வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியல்லாமல் தான் சார்ந்த சமூகம், இனக்குழு சார்ந்து கவலைப்படுபவர்கள் தங்களால் முயன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அனுசுயா. நாகர்கோவில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், ஹைதராபாத்திலுள்ள   தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிய

நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  4.3.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்

பெயர் அச்சிடுவதில் உருவான வெட்க கேடான அலுவலக அரசியல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நான் இருவேளை வெளியிலும் ஒருவேளை அறையிலும் சமைத்து சாப்பிடுகிறேன். இதற்கு மட்டுமே நேரம் உள்ளது. இன்ஸ்டன்ட் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அத்தகைய உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜியை வெவ்வேறு பெயர்களில் சேர்க்கிறார்கள். வியாபாரம் என்றால் ஆறு பொய், நான்கு உண்மை சொல்வோம் என்பார்கள். இங்கு சொல்வது, அத்தனையும் பொய்யாக உள்ளது.  மதிய வேளையில் மெல்ல வெயில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் கோ ஆர்டினேட்டர் பெயரை நாளிதழில் ஆசிரியர் போடவேயில்லை.  ஆசிரியர் மீது காட்ட முடியாத கோபத்தை அவருக்கு அடுத்த இடத்தில் பெயர் உள்ள என்மீது கொட்டுகிறார்  கோ ஆர்டினேட்டர். புறணி பேசுவது, சாடை பேசுவது, வன்மத்துடன் பழி போடுவது என சபை நாகரிகம் இன்றி வசை பாடி வருகிறார். ஆனால் இப்படி வன்மத்தாக்குதல் நடப்பதை சக உதவி ஆசிரியர்கள் அமைதியாக பார்த்தனர். நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் எனக்கு நேரும் பிரச்னைகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்படி வசை பாடுவது பட்டம் இதழுக்கு புதிதல்ல. இதற்கான

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும

பூதம் நீட்டிய நாக்கின் பெயர் - ட்ரோல்டுங்கா

படம்
  ட்ரோல்டுங்கா  பூதத்தின் நாக்கு! நார்வே நாட்டில், 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதி இது. இதனை அடையாளப்படுத்துவது  அந்தரத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பாறைத்துண்டு ஒன்று. ட்ரோல்டுங்கா (Trolltunga) என்பதற்கு, ஸ்வீடிஷ் மக்களின் மொழியில் பூதத்தின் நாக்கு என்று பொருள். நார்வே நாட்டின் தெற்குப்பகுதியில் ஏரியும் மலைப்பகுதியும் அமைந்துள்ளது. மேகமூட்டமான, ஈரப்பதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையே இங்கு காணப்படுகிறது.  பாறை அல்லது மலைத்திட்டில் நின்று கீழே பார்த்தால் அழகான காட்சிகள் தெரியும். ஆனால் அதற்கு நிறைய துணிச்சல் தேவை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடம் ட்ரோல்டுங்கா என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். தொன்மைக் காலத்தில், நார்வேயில் பனிப்பாறை நகர்ந்து வந்தது. அதிலிருந்து உருகிய நீர் பாறைகளின் பரப்பில் உறைந்தது. பின்னாளில், இவை ஏற்படுத்திய மாற்றங்களால் பாறைகள் உடைந்து ட்ரோல்டுங்கா மலைப்பகுதி உருவானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் உள்ள புற்கள், தாவரங்களை ரெய்ன்டீர் (Reindeer)எனும் கலைமான் இனத்தைச் சேர்ந்த விலங்கினம் உண்கிறது. ட்ரோல்டுங்கா பகுதியைப் பற்றிய நிறைய புனைவுக் கதைக

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்

சிரி பெயர் எப்படி வந்தது?

படம்
சிரி என்ற பெயர் வந்த கதை! ஆப்பிளின் சிரி ஏஐ மென்பொருள். இதனுடன் நீங்கள் உரையாடலாம். தேவையான விஷயங்களைத் தேடச்சொல்லலாம். இதன் பெயர்தான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது. எப்படி வைத்தார்கள் இந்த பெயரை? சிரி என்ற பெயருக்கு வெற்றியைத் தேடித்தரும் தேவதை என்று பொருள் கொள்ளலாம். அல்லது சிம்பிளாக ஐரிஸ் என்பதைத் திருப்பிப்போட்டுள்ளனர் என்று கூட கூறலாம். பொதுவாக பெயர் எளிமையாக வைப்பார்கள் எதற்கு நினைவு வைத்துக்கொள்ளவும் சுலபமாக உச்சரிக்கவும்தான். சின்னத்தம்பி என்பதை தம்பி எனலாம் பொதுவாக இருக்கிறதா சின்னா,சின்னி என அழைக்கலாம். அதுபோலத்தான் சிரி என்பதும். சிங்கள மொழியில் சிரி என்றால் அழகு. அதே சிரி என்ற உச்சரிப்பில் ஜப்பானியபொருள் புட்டம் என வருகிறது. ஸ்பெல்லிங் வேறு ஆனால் உச்சரிப்பு ஒன்றுதான். இன்று ஆப்பிளின் ஐ ஓஎஸ்ஸில் சிரி முக்கியமான அங்கம். அழகான பெண் புகைப்படம். வேஸ்ட் செய்ய வேண்டாமே என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டோம். மன்னிச்சூ.... நன்றி: மென்டல் ஃபிளாஸ்