விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்ற ப்ரீத்தி ரெட்டி !
ப்ரீத்தி ரெட்டி ப்ரீத்தி ரெட்டி இயக்குநர், காந்தார் சவுத் ஆசியா ப்ரீத்தி ரெட்டி விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்றவர். இவர் மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு முன்னர் மைண்ட்ஸ்கேப், டிஎன்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களில் துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். சிஐஐ வணிக அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவராக செயல்பட்டுள்ளார். உலகம் முழுக்க இந்த நிறுவனத்திற்கு 28 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். மொத்தம் 90 சந்தைகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் வருமானம் அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு ப்ரீத்தி ரெட்டியின் தலைமைத்துவம் முக்கியமான காரணம், காந்தார் நிறுவனம், மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்து ஆய்வுகள் நடத்தி நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்கிறது. இதன்மூலம்...