இடுகைகள்

எஸ்.எல்.வி மூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து இன மக்களையும் இணைத்து பொருளாதார ஏணியில் ஏற்றிய மாமனிதர் ! லீ குவான் யூ - எஸ்.எல்.வி மூர்த்தி

படம்
                            லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி எஸ் . எல் . வி மூர்த்தி கிழக்கு தீவு நகரமான சிங்கப்பூர் எப்படி பல்வேறு இன , மத தகராறுகளை சமாளித்து பொருளாதார வளர்ச்சி பெற்றது என விவரிக்கிறது இந்த நூல் . சிறு நகரம்தானே என பலரு்ம் நினைத்தாலும் நாட்டில் ஒழுங்கை எப்படி லீ ஏற்படுத்தினார் என்பது நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்றே கூறவேண்டும் . 1819 இல் உருவான சிங்கப்பூர் ராபிள்ஸ் என்ற ஆங்கில அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது . அவரைப் பற்றிய தகவலும் , நகரைப் பற்றிய தொலைநோக்கு கொண்டவரை அரசியல் சதிகளால் எ்ப்படி வீழ்த்தினார்கள் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது . இன்று சிங்கப்பூரில் ராபிள்ஸ் உரு்வாக்கிய பல்வேறு கல்வி , கலாசார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது சிங்கப்பூர் மக்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது என்ற தகவல் மட்டுமே ஆறுதலாக உள்ளது . சிங்கப்பூர் வரலாற்றில் ராபிள்ஸூக்கு பிறகு அதேபோன்ற இடத்திற்கு வருபவர்தான் லீ . சீனராக இருந்தாலும் கூட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் தொடக்கத்திலேயே இருந்தது அ

தொழிலில் வென்று மக்களின் மனதை வென்றவர்கள் - எஸ்எல்வி மூர்த்தியின் நூல்!

படம்
தொழில்முன்னோடிகள் எஸ்.எல்.வி மூர்த்தி இந்து தமிழ் திசை ரோத்சைல்ட் தொடங்கி அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் வரையில் நீள்கிற தொழில் முனைவோர்களின் கதை. இவர்களின் தேர்வு ஓரளவு தனித்துவமானது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவருமே கடுமையான சவால்களைச் சந்தித்தவர்கள், மக்களின் தேவைகளுக்காக உழைத்து புதிய விஷயங்களை உருவாக்கி வென்றவர்கள், மனிதநேய பணிகளுக்காக உழைத்து வருகிறவர்கள். இதில் தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோரைத் தவிர்த்திருக்கலாம். காரணம் அவரைப்பற்றி நிறைய எழுதிவிட்டதுதான் காரணம். மேலும் நிறைய கண்டுபிடிப்புகளை அவர் திருடியதாக குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில் அவரை எதற்காக இந்த நூலில் பிரசுரித்தார்கள் என்று நண்பர் கேட்டார். பதிலை மூர்த்தி காருதான் கூறவேண்டும். எனக்கு பிடித்த இரு தொழிலதிபர்கள் ஆன்ட்ரூ கார்னகி, கிங் ஜில்லெட் என்ற இருவர்தான். இருவரின் வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டது. பஃபட், பில்கேட்ஸ் இருவரும் தங்களது சொத்துக்களை சமூகசேவைக்கு அளிக்கிறார்கள் என்றால் கார்னகி தன் ஒட்டுமொத்த தொழிலை விற்று அப்பணத்தில் கல்வி நிறுவனங்களை அமைத்தார். சமூக சேவைக்கு பணம் செலவிட்டார். இத