இடுகைகள்

டி ரென்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசாட்சியைப் பிடிக்க மனிதர்களை அதீத ஆற்றல் கொண்ட கொலைமிருகங்களாக மாற்றும் மர்ம மனிதர்கள்!

படம்
  டிரென்ஜி - ஃபயர் கிரின் சீன திரைப்படம் ஓன்றரை மணி நேர படம் ஐக்யூயி ஆப் டாங் மன்னர் கால ஆட்சியில் நீதித்துறையில் துணை இயக்குநராக பதவியேற்க வருகிறார் டி ரென்ஜி. துப்பறிவாளரான இவர், தலைநகரில் நடக்கும் ஃபயர் கிரின் வழக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து எப்படி துப்புதுலக்கி அரச துரோகிகளைக் கண்டுபிடித்து தண்டித்தார் என்பதே கதை.  படத்தில் மெல்லிய காதல் ஒன்றுண்டு. அதுவும் இறுதியில் சில உண்மைகள் வெளியான பிறகு காணாமல் போகிறது. எனவே, பார்வையாளர்கள் வருந்த வேண்டாம். இங்கு ஷெர்லாக் ஹோம்ஸ் போல டி ரென்ஜி எப்படி துப்பறிகிறார், ஒரு மனிதனைப் பார்த்தால் எதையெல்லாம் கவனிக்கிறார் என்பதை பார்த்து வியக்கலாம். ஆச்சரியப்படலாம். படத்தில் அதற்கான நிறைய இடங்கள் உண்டு.  டி ரென்ஜி, தலைநகரில் நீதித்துறைக்கு புதிய துணைத்தலைவராக பணிபுரிய வருகிறார். அவரது பலம் முழுக்க மூளைதான். தற்காப்புக்கலையோ, வாள் பயிற்சியோ கிடையாது. தெருவில் நி்ற்கும்போது ஒரு தேர் வேகமாக வருகிறது. அதிலிருந்து பெட்டி கீழே விழ, அதில் இருந்து வினோத விலங்கு ஒன்று ஓடுகிறது. பார்க்க, உடல் முழுக்க நெருப்பு பற்றி எரிவது போன்று உள்ளது. குதிரை ப...