இடுகைகள்

சந்திரவம்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்