இடுகைகள்

கவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிராக மாணவர்களிடம் பிரசாரம்!

படம்
  பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் சூழல் அமைப்பு! பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்தது. இதன் விளைவாக உருவான பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பலரும் கவலைப்படவில்லை. இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி, வீட்டில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முயல்கிறது வாக் ஃபார் பிளாஸ்டிக் (Walk for Plastic)என்ற சூழல் அமைப்பு. இது, 2019ஆம் ஆண்டு பி.கௌதம் என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்பு. சூழல் பற்றிய பல்வேறு தன்னார்வ செயல்பாடுகளை சமூக வலைத்தளத்தில் பிரசாரம் செய்கிறது.  “எங்களது வாக் ஃப்ரம் ஹோம் என்ற பிரசார திட்டம், வீட்டில் சேரும் நாமறியாத பிளாஸ்டிக் குப்பைகளை அடையாளம் கண்டு அதனைக் கட்டுப்படுத்த, மறுசுழற்சி செய்ய உதவுகிறது” என்றார் கௌதம்.  கடந்த மாதத்தில், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பற்றிய விழிப்புணர்வை வாக் ஃபார் பிளாஸ்டிக் அமைப்பு பிரசாரம் செய்தது. பிளாஸ்டிக் பாட்டில்களை கைவிட்டு ஸ்டீல் பாட்டில்களுக்கு மாறியவர்கள் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். வாக் ஃப்ரம் ஹோம் திட்டத்தில், 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்று த