இடுகைகள்

உலகம். கேபிள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றிய ஃபைபர் ஆப்டிக்ஸ்!

படம்
தெரிஞ்சுக்கோ ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்தான் இன்று நீங்கள் மும்பைக்கு அனுப்பும் இமெயிலை நொடியில் கொண்டுபோய் சேர்க்கிறது. இங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பினாலும் சேர்க்கும் தொழில்நுட்பம் அதேதான். அந்தளவு தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒற்றை ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வழியாக 25 ஆயிரம் போன் அழைப்புகள் செல்கின்றன. ஃபைபர் ஆப்டிக் கேபிளின் உள்விட்டம் 9 மைக்ரான்கள் ஆகும். இதன் வெளிப்புறம் 125 மைக்ரான்கள் என அமைந்துள்ளது. சீனாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வீடுகளையும் அலுவலகங்களையும் இணைக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் நாற்பது நாடுகள் இணைந்துள்ளன. இதில் தோராய தரவிறக்கவேகம்  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் இடம் 25. டோக்கியோ ஆஸ்லோ, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் மாத இணையக்கட்டணம் 25 முதல் 40 டாலர்கள் வரை உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுக்க நாடுகளிடையே 80 சதவீத டேட்டா போக்குவரத்தை ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலமே நடைபெறுகிறது. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் டேட்டாவின் வேக அளவு 80 மில்லி செகண்ட்ஸ். நன்றி - க்வார்ட்