இடுகைகள்

சிப்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட

உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள்! - ஐகான் ஸ்டார் எல்சா மஜிம்போ

படம்
  எல்சா மஜிம்போ நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், சமூக வலைத்தள பிரபலம் ஊடகம் நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய நினைப்பீர்கள். அதையே செய்வீர்கள். ஆனால், சுற்றியுள்ளவர்கள் உங்களை கிண்டல் செய்வார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையே படாதீர்கள்  இதை சொல்லும் எல்சாவிற்கு வயது 20. என்ன சாதித்துவிட்டார் இந்த வயதில் இப்படி பேசுகிறார் என நினைப்பீர்கள். கென்யாவின் நைரோபி நகரில் பிறந்தவர் எல்சா. செஸ் விளையாடுவது அவருக்கு பிடித்தமானது. அப்போதுதான் கோவிட் 19 பிரச்னை தலைதூக்க தன்னைத்தானே ஊக்கப்படுத்த வினோதமான உடை அமைப்பில் வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டார்.  அவைதான் கென்யாவின் ஐகான் ஸ்டாராக எல்சாவை மாற்றியிருக்கிறது. இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் எல்சா எனும் ஆவணப்படத்தை எடுத்து அதை  திரிபெக்கா திரைப்பட விழாவில் பதிவிட இருக்கிறார்.  90களில் பிரபலமான குளிர்கண்ணாடிகளை அணிந்தபடி வட்டமான சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பேசுகிறார் எல்சா. நமக்கே தோன்றுகிறது இது ஐகானிக்காக இருக்கிறதே... அதேதான் இணையத்தில் இவரது வீடியோக்களைப் பார்த்தவர்களுக்கும் தோன்றியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வ

பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

படம்
  இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.  இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.  அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை.  தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இது எந்தளவு

பாலாஜி வேபர்ஸ் - குஜராத் நிறுவனத்தின் பிடிவாத சாதனை!

படம்
  குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பாலாஜி வேபர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. 1982 இல் தொடங்கிய நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஆயிரம் கோடி என்ற அளவில் லாபத்தை அடைந்துள்ளது. நூடுல்ஸ் மற்றும் சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் தயாரித்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்று வருகிறது. ராஜஸ்தான் , மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதலிடத்திலும் பிற மாநிலங்களில் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.  இந்த நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு பன்னாட்டு நிறுவனம் வாங்குவதற்கு முயன்றாலும் அதை விற்பதற்கு  இதன் முதலாளி விரும்பவில்லை. இப்போது 2 ஆயிரம் கோடியை தாண்டிய வணிகத்தைப் பெற்று வளர்ந்துவருகிறது.  பாலாஜி வேபர்ஸ் நிறுவனம், உருளைக்கிழங்கு சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் விற்றுவருகிறது. நிறுவனத்தின் வணிகத்தை இப்போது அடுத்த தலைமுறையினர் பார்த்துக்கொள்கிறார்கள். குடும்ப வணிகமாக இருப்பதால் எப்படியோ தாக்குப்படித்து பெப்சிகோ, ஐடிசி, ஹால்திராம் ஆகிய நிறுவனங்களை சமாளித்து வருகிறது.  சந்துபாய் தனது சகோதர ர்களோடு தொடங்கிய நிறுவனம் இது. இப்போது அவரின் மகன்கள் தொழில் இ

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி