இடுகைகள்

சூப்பர் ஈகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் வாழ்வை வடிவமைக்கும் மூன்று உளவியல் அம்சங்கள்!

படம்
  ஃப்ராய்டின் மகள் செய்த ஆய்வுகளைப் பற்றி பேசுவோம். இவர் தந்தை ஃப்ராய்ட் செய்த ஆய்வுகளை மறுத்து வேறு கருத்துகளை முன்வைத்தார். அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளுக்கு பாம்பு ஒன்று தடை செய்யப்பட்ட கனியை சாப்பிட ஆசை காட்டி, அவர்கள் சாப்பிட்ட கதையை படித்திருப்பீர்கள். கிறிஸ்துவ மத புனித நூலான பைபிளில் மேற்சொன்ன கதை இடம்பெற்றுள்ளது. இதை அடையாளம் காட்டுவது போலவே ஃப்ராய்ட் தனது உளவியலை மூன்று அம்சங்கள் கொண்டதாக வடிவமைத்தார். இதில் ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ ஆகியவை உள்ளடங்கும்.  இதில் ஐடி என்பது பாம்பு. ஆசையைத் தூண்டிவிடுவது. உணவு, பாலியல் உணர்வு, உடை, வீடு என பல்வேறு விஷயங்கள் மீது ஆசைப்படத் தூண்டுவது என கொள்ளலாம். சூப்பர் ஈகோ என்பது நடத்தை கொள்கை, லட்சியம் என கொள்ளலாம். பெற்றோர்கள், சமூகம் சொல்லும் நன்னடத்தை விதிகள், வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றைக் கொண்டது. ஈகோ என்பது மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடைபட்டு முடிவெடுத்து இயங்குவது. மனதில் ஆசைகள் காவிரியாக பொங்கினாலும் அதை அடக்கியபடி முடிவுகளை எடுக்கும் செயல்திறன் கொண்டது.  தந்தை ஃப்ராய்ட் கூறிய கருத்துகளை சற்று விரிவுபடு