டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்
டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள் பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான். டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்...