தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த களத்தில் குதிக்கும் தன்னார்வ அமைப்பு - பால் உத்சவின் பணிகளை அறிவோமா?

 










அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் பால் உத்சவ் அமைப்பு! 


2009ஆம் ஆண்டு தொடங்கி, கர்நாடகத்தின் பெங்களூருவில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு, பால் உத்சவ். இந்த அமைப்பு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர்களுக்கான சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதனை பினு வர்மா மற்றும் ரமேஷ் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி நடத்தி வருகின்றனர். ரமேஷ் பாலசுந்தரம், கர்நாடக அறிவு ஆணையத்தில் முன்னாள் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். 

பால் உத்சவ் , அரசு பள்ளிகளுக்காக இரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் திட்டம் ஐஷாலா (ishaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை, எழுது பொருட்கள், காலணிகள், சானிடரி நாப்கின், குடிநீர் பாட்டில்களை வழங்குகிறார்கள். மாணவர்கள் கல்வியை சுமையின்றி கற்க உதவும் திட்டமிது. 

பள்ளியில் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் டிவி, இணையம், மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இரண்டாவது திட்டம், சம்பூர்ண ஷாலா (Sampoorna Shaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்துகிறார்கள். இதிலும் மாணவர்களுக்கான எழுது பொருட்கள், புத்தகப்பை, குடிநீர் பாட்டில் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறார்கள். 

கர்நாடகத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்தியுள்ளது பால் உத்சவ் அமைப்பு.  ஐஷாலா, சம்பூர்ண ஷாலா என இரு திட்டங்களுமே முன்மாதிரியான பள்ளியை உருவாக்க உதவுகின்றன. பால் உத்சவ் அமைப்பு, தனது செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை தனிநபர்கள் மற்றும்  அமைப்புகளிடமிருந்து பெ
றுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் ஐஷாலா திட்டத்தை 400 அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

https://balutsav.org/ngo-for-education/#

https://www.hindustantimes.com/cities/bengaluru-news/bal-utsav-a-bengaluru-ngo-that-is-working-to-make-govt-schools-smarter-101651999725819.html?utm_source=ht_site_copyURL&utm_medium=social&utm_campaign=ht_site

கருத்துகள்