பயிர்களை வளர்க்க பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகளை மாற்றிக்கொள்வது அவசியம்! - அரியல் ஆர்டிஸ் போயியா

 













நேர்காணல்

அரியல் ஆர்டிஸ் போயியா

பொருளாதார பேராசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம்

உங்களது ஆராய்ச்சி பற்றி கூறுங்கள்.

வரலாறு மற்றும் எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள்  பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். குறிப்பாக, வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள். 

2021ஆம் ஆண்டு நானும், சக பணியாளர்களும் வேளாண்மையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை பற்றிய ஆய்வை செய்தோம். இதில் பயிர்கள், மரங்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை உள்ளடங்கும். 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 99.9 சதவீத உலக வேளாண்மை உற்பத்தியை நாங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தோம். வெப்பம் அதிகரித்த காலத்தில் வேளாண் துறையில் உற்பத்தி வீழ்ச்சியை அடையாளம் கண்டோம். இதற்கு, சரியான அளவில் முதலீடுகள் தேவை. 

பயிர்களை எப்படி விளைவிப்பது?

மனிதர்களின் உதவியின்றி முன்னமே பயிர்கள் இங்கு சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன. மனிதர்களின் எண்ணிக்கை பெருகியபோது, வேளாண்மையின் உற்பத்தி குறையத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில், 7 ஆண்டுகளுக்கான வேளாண்மை உற்பத்தித் திறனை நாம் அறிந்தே அழித்திருக்கிறோம். 

நீங்கள் உற்பத்தித் திறனை வளர்க்க தீர்வுகளை வைத்திருக்கிறீர்களா?

1960களில் உலகமெங்கும் வேளாண்மை துறையில் உற்பத்தித் திறன் குறையத் தொடங்கி, 1980இல் வேகம் பிடித்தது. இதனை நாம் தடுக்க இத்துறையில் நிறைய முதலீடுகள் தேவை. வெப்பமண்டல நாடுகளில் இதன் தாக்கம் வேலைவாய்ப்பு, உணவுத்துறையில் வெளிப்படும். இந்தியாவின் வேளாண்துறை உற்பத்தியிலும் இது வெளிப்படும் வாய்ப்புண்டு. 

ஆப்பிரிக்க பகுதியில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யாமல் பயிர்களை விளைவித்தனர். அதன் விளைவாக, அங்கு உற்பத்தித்திறன் குறைந்துவிட்டது. காடுகளை அழித்து விளைநிலமாக்குவது, நிலத்தை மாசுபடுத்தும் உரங்களை பயன்படுத்துவது உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவாது.  இந்தியா, பயிர்களை வளர்க்க பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகளைப் பற்றி யோசிப்பது அவசியம்.




கருத்துகள்