இடுகைகள்

சக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

படம்
  தி ஹன்டர் (or dark hunter) மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் 292----- ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம். சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு   வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக். கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர்

கொலைகாரர்களை பின்தொடரும் உளவியல் சக்தி! -ரீலா? ரியலா?

படம்
  சாட்சிகளின் பிழை சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை சாட்சிகள் அதிகளவு பயன்பாடு கொண்டவர்கள் கிடையாது. யாராவது இதுபோன்ற லாரியைப் பார்த்தீர்களா என போலீசார் கொலைகார ர் ஒட்டி வந்த வண்டியைப் பற்றி கேட்பார்கள். அதற்கு நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அத்தனையும் ஒன்றுபோல பார்த்தேன் சார். ரிவார்டு எப்போ கொடுப்பீங்க என்றுதான் இருக்கும். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேர் லாரியைப் பார்த்திருப்பார்கள் என்ற லாஜிக் கேள்வியைக் கேட்டால் அனைத்து விஷயங்களும் அடிபட்டு போய்விடும்.  மேலும் கொலைகாரர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க சொன்னால், இதுபோல இப்படித்தான் இருந்திருக்கும் என குத்துமதிப்பான விஷயங்களை சொல்லுவார்கள். இதை வைத்து என்ன செய்வது? தந்தியில் செய்தியாளர்களை விட்டு குறிப்புகளை கொடுத்து கட்டுரை எழுத வைக்கலாம். அவ்வளவுதான்.  உளவியல் சக்தி தம்மண்ண செட்டியார் எழுதிய புத்தகத்தை கண்கள் சிவக்க படித்தவர் வேண்டுமானால் கீழ் வரும் விஷயத்தை நம்பலாம். வேறு யாரும் நம்ப மாட்டார்கள். உளவியல் சக்தி கொண்டவர்களை காவல்துறை சில சமயங்களில் பயன்படுத்துகிறது. இவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்த்து அமிதா பா  என மந்திர

ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
      ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம் ? ஸ்மார்ட் ரோடு என்பதன் பொருள் , அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதுதான் . இதில் இங்கிலாந்தில் செம்பு சமாச்சாரங்களை பொருத்தியுள்ளனர் . இதில் கார்கள் , லாரிகள் செல்லும்போது அதன் வழியாக மின்சாரம் உருவாகும் . அதனை கணினிகள் அளவிட்டு சேமித்துக்கொள்ளும் . மேலும் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள சென்சார்கள் மூலம் வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியும் . இத்தகவல்கள் மூலம் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கணித்து சாலைகளிலுள்ள சிக்னல்களை திறமையான முறையில் இயக்க முடியும் . இங்கிலாந்து இவ்வகையில் ஸ்மார்ட் ரோடுகளை உருவாக்க அதிகம் செலவு செய்து வருகிறது . பொதுவாக சோலார் பேனல்களை கண்ணாடி வடிவில் பதித்துக்கொள்ளத்தான் தயாரிக்கிறார்கள் . இதனை சாலையில் பயன்படுத்துவது முதலில் சாத்தியமில்லாத தாக இருந்தது . ஆனால் பிரான்ஸில் 2016 ஆம் ஆண்டில் 2800 போட்டோவால்டைக் செல்களைக்கொண்டு சாலையை உருவாக்கினார்கள் . நோக்கம் நல்லதுதான் என்றாலும் இந்த திட்டம் எதிர்பார்த்தபடி ஆற்றல் உருவாக்க உதவ வில்லை . அதற்குபதில் அதில் சென்ற கனரக வாகனங்களால் சோலார் செல்க

உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன நடக்கிறது?

படம்
மிஸ்டர் ரோனி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் என்ன நடக்கிறது? உடற்பயிற்சிகளை அர்னால்டு போஸ்டர் பார்த்து நாம் செய்யும்போது, உடலெங்கும் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் விளைவாக உடலுக்கு கிடைக்கும் சிக்னல், உடலின் கொழுப்பை கரைத்து சக்தியாக்கு என்பதுதான். தசைகளில் அடர்த்தியான உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து லேக்டிக் அமிலம் உற்பத்தியாகிறது. உடல் பாகங்களில் மூளைதான் அதிகளவு ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின்போதும் இதுதான் நடக்கிறது. இதயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத்தின் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் அளவும் பெரிதாகிறது. நுரையீரல் மட்டும் சும்மாவா, சாதாரண அளவை விட பதினைந்து மடங்கு அதிகமாக ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது. இருபது லட்சம் வியர்வை சுரப்பிகள் கொண்ட தோலில் இருந்து 1.4 லிட்டர் வியர்வை ஒருமணிநேரத்திற்கு வெளிவரும்.  உடற்பயிற்சியின் முக்கியமான நல்லவிஷயம், உடலில் கால்சியம் வீணாவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. நன்றி - பிபிசி

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆ

’இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது’

படம்
சதீஸ் ரெட்டி, டிஆர்டிஓ நேர்காணல் இந்தியா தன் சாட்டிலைட்டை ஏவுகணை மூலம் தகர்த்து எறிந்துள்ளது. சக்தி எனும் திட்டத்தைப் பற்றி டிஆர்டிஓ இயக்குநகர் சதீஸ் ரெட்டி பேசுகிறார். இந்தியா இன்று உலகநாடுகளின் லிஸ்டில் இணைந்துள்ளது. நீங்கள் இந்த திட்டம் பற்றி விரிவாக கூறுங்களேன்.  சக்தி எனும் இத்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2016-17 வாக்கில் தொடங்கினோம். திட்டத்தை வேகமாக்கியது ஆறுமாதங்களுக்கு முன்புதான். முன்பே நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஏவுகணையை உருவாக்கி சாதித்துள்ளோம். இதில் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுங்கள். இதில் பயன்படுத்திய தொழில்நுட்பம் பற்றி பேசமுடியாது. ஆனால் இதில் சவால்கள் என்பது மூன்று இடத்தில் இருந்தது. இலக்கின் மீதான துல்லியம், இலக்கை சரியான கோணத்தில் தாக்கும் திட்டம், டெக்னாலஜியைப் பயன்படுத்தி இலக்கை சரியான முறையில் அணுகுவது ஆகியவை பெரும் சவாலாக இருந்தது. இதன்மூலம் நாம் அடையும் நிலை என்ன? இந்தியா தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவில் தயாரானது என்ற பெருமை கொண்டது. இதன் அமைப்பு, மென்பொருட்கள், சென்ச