உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன நடக்கிறது?
மிஸ்டர் ரோனி
உடற்பயிற்சி செய்யும்போது உடலில் என்ன நடக்கிறது?
உடற்பயிற்சிகளை அர்னால்டு போஸ்டர் பார்த்து நாம் செய்யும்போது, உடலெங்கும் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் விளைவாக உடலுக்கு கிடைக்கும் சிக்னல், உடலின் கொழுப்பை கரைத்து சக்தியாக்கு என்பதுதான். தசைகளில் அடர்த்தியான உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து லேக்டிக் அமிலம் உற்பத்தியாகிறது.
உடல் பாகங்களில் மூளைதான் அதிகளவு ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின்போதும் இதுதான் நடக்கிறது. இதயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத்தின் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் அளவும் பெரிதாகிறது.
நுரையீரல் மட்டும் சும்மாவா, சாதாரண அளவை விட பதினைந்து மடங்கு அதிகமாக ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது.
இருபது லட்சம் வியர்வை சுரப்பிகள் கொண்ட தோலில் இருந்து 1.4 லிட்டர் வியர்வை ஒருமணிநேரத்திற்கு வெளிவரும். உடற்பயிற்சியின் முக்கியமான நல்லவிஷயம், உடலில் கால்சியம் வீணாவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
நன்றி - பிபிசி